முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை பற்றிய சல்மானின் எம்பியின் பிரேரணைக்கு பிரதமர் சாதகமான பதில்

0
149

21476262_1919996931585102_1308001900_nஅட்டாளைச்சேனை முஹம்மது பர்ஸான்
கிழக்கு மாகாணத்தில் பல பிரதேச பிரிவுகளிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். அப்பகுதிகளில் காணியற்றோருக்கு அரச காணிகளைப்பெற்றுக் கொடுப்பதற்கான காணிகள் இல்லை. தற்போதையை காணிப்பங்கீடுச்சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்குவதற்கான சலுகைகளோ உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வசதிகளோ இல்லை.

இது அவர்களது அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகவுள்ளதால் வெற்றுக்காணிகள் உள்ள அண்மைய பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து  காணியில்லாத முஸ்லிம்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக காணிச்சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையைச் சமர்ப்பித்தார்.

அதற்குப் பாதிலளித்துப்பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரேரணையைச் சமர்ப்பித்த சல்மானுக்கு நன்றி கூறியதோடு, இது பற்றி அரசின் கவனம் உடனடியாகச் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் உரையாற்றும் போது,

தற்போது எமது மக்கள் தொகை 23 மில்லியன்கள். அன்று அது 16 மில்லியன்களாக இருந்தது நாம் அன்று காணி உரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்த போது, மக்கள் தொகை வெறும் 5 மில்லியனாகவே இருந்தது. ஒருவருக்கு 3  ஏக்கர் நிலத்தை நாம் வழங்கினோம். இன்று இது ஒரு பாரிய பிரச்சினையாகவுள்ளது. காணியற்றோருக்கு அவர்கள் வாழும் பிரதேசத்திலேயே காணிகளைக் கொடுக்கும் வசதியில்லாமலுள்ளது. நாட்டின் கொள்கையோ குறித்த பிரதேச செயலகத்திலிருந்தே காணி கொடுபட வேண்டுமென்பதாகும். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது மக்களின் விவசாயத்திற்கு, வீடு கட்ட காணிகள் தேவை. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரில் காணிப்பற்றாக்குறை காரணமாக மாடி வீட்டுத்திட்டங்களை அமுல் செய்கின்றோம். கிராமப்புறங்களிலும் இப்பிரச்சினையுள்ளது. ஒரு தனி மனிதனுக்கு ஒரு ஏக்கர் காணி கூட இல்லை.

எனவே, சல்மானின் பிரேரணையை அரசு பரிசீலனை செய்வது அவசியமாகும். காணியற்றோருக்கு காணி வழங்கும் கொள்கை என்ன? மாடி வீடுகளை கிராமப்புறங்களிலும் அமைக்க முடியுமா? என்பதையெல்லாம் ஆலோசனை செய்து பார்த்தல் அவசியமாகும். அரசுக்குச் சொந்தமான எல்லாக்காணிகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு மூலம் இலகுவாக காணிகளை இனங்காணவும் முகாமைத்துவம் செய்யவும் பலனளிக்கக் கூடியவாறு அவற்றை உபயோகிப்பதற்கும் ஏதுவாக அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நமது தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி 2 மில்லியன் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டங்கள் வரையப்படும். அதன் மூலம் காணியற்றோருக்கும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புற்றோருக்கும் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சேவையாற்ற முடியுமெனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here