வட மத்திய மாகாண தமிழ் மொழி மூல ஆசிரியர் பிரச்சினைக்குத்தீர்வு என்ன?

0
271

csafcafafvஆரிப் எஸ்.நளீம்
வடமத்திய மாகாணக் கல்வியமைச்சின் மதிப்பீடின் படி தமிழ் மொழி மூலப்பாடசாலைகளில் நிலவும் மொத்த ஆசிரியர் வெற்றிடங்கள் 896 ஆகும். அது நாளடைவில் 396 ஆக குறைந்துள்ளதாகவும், இறுதியாக வெளியான கணிப்பீட்டின்படி, இம்மாவட்டத்தில் காணப்படும் மொத்த ஆசிரியர் வெற்றிடங்கள் 190 என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளடைவில் அதுவும் கேள்விக்குறியாகி தமிழ் மூலா ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடில்லை என்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.

இதனால் இம்மாவட்டத்தில் தமிழ் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகும் நிலை தோன்றியுள்ளது.

இம்மாகாணத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் எண்ணிக்கை 94 ஆகும். கடமையாற்றும் ஆசிரியர்களின் தொகை 1680 என்பதுடன், ஒரு பாடசாலைக்கு 17 ஆசிரியர்கள் என்ற கணிப்பீட்டிலே உள்ளமையும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இதில் கணித, ஆங்கில, விஞ்ஞானம் போன்ற முக்கிய பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடுள்ளமையும், இஸ்லாமிய சமயப்பாடத்தைக் போதிக்கக்கூட சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லையென்பது பெரும் வேதனையான விடயமாகும்.

தகுதி வாய்ந்தோரைக் கண்டறிந்து ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும், தமக்கு வாக்களித்த மாவட்ட மக்களின் எதிர்காலச் சந்ததியினரின் கல்வித்தேவையினை நிவர்த்தி செய்து வைக்க வேண்டியதும் மாகாண, மத்திய கல்வியமைச்சர்களின் பணி என்பதுடன், இம்மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிககளான பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், வட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான S.H.M.அன்சார், P.சஹீது, A.R.ஹுசைன் ஆகியோரதும் கல்வி அதிகாரிகளினதும் பொறுப்பல்லவா?

-புள்ளி விபர உதவி
ஜவர்ஷா மற்றும் பர்வீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here