டெமார்க் வெற்றிக்கிண்ணம்-2017: கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்துக்கொண்டது

IMG_6386(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்திய டெமார்க் சவால் கிண்ணம்-2017 சுற்றுப்போட்டியில் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக்கழகம் மழை குறுக்கிட்டதால் டெமார்க் சவால் கிண்ணம்-2017 சுற்றுப்போட்டி விதியின் பிரகாரம் வெற்றி தீர்மானிக்கப்பட்டு 4 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தைத் சுவீகரித்தது.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (8) வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் விக்டோறியஸ் விளையாட்டுக்கழகத்தலைவர் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஷ்டர் ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் விளையாட்டுக்கழகம் என்பன பலப்பரீட்சை நடாத்திய இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ் விளையாட்டுக்கழகம் 30 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து, 213 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

214 என்ற வெற்றி இலக்கைப்பெற களமிறங்கிய கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில், 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 128 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை குறுக்கீடு செய்தமையால் போட்டி இடை நிறுத்தப்பட்டது.

ஆனால், தெடர்ந்தும் மழை பொய்து கொண்டிருந்தமையால் போட்டியைத்தொடர முடியாத நிலையேற்பட்டது. இதனடிப்படையில், நடுவர்களின் இறுதி முடிவின்படி 4 ஓட்டங்களால் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் துடுப்பாட்டத்தில் 58 ஓட்டங்களைப் பெற்ற நபீட் தெரிவாகிய அதே வேளை, இச்சுற்றுப்போட்டியில் மொத்தமாக 148 ஓட்டங்களையும் 8 விக்கட்டுக்களையும் கைப்பற்றியதுடன், இத்தொடரில் 3 தடவைகள் ஆட்ட நாயகன் விருது பெற்ற கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகத்தின் தணு தொடர் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விறுதிப்போட்டி நிகழ்விற்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப், “எலிப்ஸ்’ நிறுவணத்தின் பொறியியளாளர் கே.எல்.எம். றமீஸ், மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறூக் மற்றும் ‘லாறா’ நிறுவனத்தின் தவிசாளர் கே. சிவா ஆகியோர்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தனர்.IMG_6356 IMG_6359 IMG_6362 IMG_6373 IMG_6377 IMG_6386

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*