மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பெருநாள் ஒன்றுகூடலும்.

Spread the love

hhhhhhhகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் கல்குடா பிரதேசத்திலிருந்து சவூதி மதீனா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு செல்லவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடலும் 02ம் திகதி (சனிக்கிழமை) மீராவோடை எம், பீ, சீ, எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் அஷ்ஷெய்க் ரீ.எல். அமானுல்லாஹ் ஷர்கி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் இவ்வருடம் மதீனா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர தெரிவு செய்யப்பட்டுள்ள அபூபக்கர் முஹம்மது இர்பான் (சலபி) மற்றும் ஈசா லெப்பை முஹம்மது அமீன் ( இர்பானி) ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) MA அவர்கள் கலந்து கொண்டு விஷேட உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.(F)4a826ab3-5b00-4081-8909-4d642e2854c2 1836ecbe-06dd-4589-8419-92611e181bbb a519f659-5b15-420c-a0ae-3c30684a7c90 cd70750e-127c-4db3-ad3c-da5918add0be

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*