மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.

0
263

919342_324901394305401_485294309_oமுதலமைச்சரின் ஊடகப்பிரிவு
மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் விதத்தில் பேசி அரசியல் செய்ய நினைத்த காலம் மலையேறிவிட்டதுடன், தற்போது சிறுபான்மைச்சமூகம் சாணக்கியமாகச் செயற்பட்டு  உரிமைகளை வென்றெடுக்கும்  காலம் உதயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

உத்தேச அரசியமைப்புத் திருத்தத்தினூடாக சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களுக்கு அரசியல் விடுதலையினைப் பெற்றுக்கொடுக்க எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் மிகவும் சாணக்கியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வந்தாறூமூலையில் பொது நூலகமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக்கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,

வெறும் சமூக மற்றும் இன ரீதியான உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களினூடாக மக்களை ஏமாற்றலாம் என நினைத்து சிலர்  அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர். ஆனால், அவற்றுக்கெல்லாம் ஏமாறுவதற்கு மக்கள் இனி மேலும் தயாராக இல்லையென்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவற்றையெல்லாம் முறியடித்து இன்று  கிழக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸும்  நல்லிணக்கத்துடன் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை பிரதேச மற்றும் இன ரீதியான பாகுபாடின்றி சமமாகப்பங்கீடு செய்து அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.

இன்று கிழக்கின் நிலைமைகளே தெரியாமல் சிலர் நல்லிணக்கத்தை வளர்ப்பதாகக்கூறிக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களிடையே  பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர். மாகாண சபைகள் நிதிகளைப் பெற்றுக்கொள்ளப்படும் சிரமங்கள்  மற்றும் ஒதுக்கப்படும் நிதிகள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையிலுள்ளவர்கள் அறிந்திருக்கின்றார்களா? என்ற சந்தேகம் தோன்றுகின்றது.

சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் செய்வதாகக் கூறுபவர்கள் நிதியொதுக்கீடுகளில் கிழக்கு மாகாண சபை புறக்கணிக்கப்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

ஆகவே. நாமும் எமது தனிப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளில் கூட இனங்களுக்கும் பிரதேசங்களுக்கும் சமமாக ஒதுக்கீடு செய்து அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம்.

ஆகவே, இங்கு வந்து தமது தனிப்பட்ட அரசியலை முன்னெடுக்க பிளவுகளை ஏற்படுத்த முனையாமல் சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கிற்கு அதிக நிதிகளை ஒதுக்க மத்திய அரசாங்கத்துக்கு  அழுத்தம் கொடுத்து அங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைய வேண்டும்.

இன்று நாம் தமிழ் சகோதர்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நாசிவன் தீவு, இழுப்பத்தடிச்சனை, களுவான்கேணி மற்றும் வந்தாறுமூலை  ஆகிய பகுதிகளில் குடிநீர்த்திட்டங்கள் மற்றும் வாசிகசாலைத் திறந்து வைத்துள்ளோம்.

ஆகவே, நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பிரதேச இனப்பாகுபாடின்றி அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம். இன்று  மாகாணத்தில் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்துள்ளோம். அதே போன்று அதிகாரிகள் மற்றும் மக்கள் மத்தியில்  நல்லிணக்கத்தை  ஏற்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை மத்திய அரசாங்கத்தில் அதற்குரிய பொறுப்பிலுள்ளவர்களை விட சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த காலங்களில்  திட்டமிட்டுப் பிரிக்கப்பட்ட  தமிழ், முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைப்பது இலகுவான காரியமல்ல என்ற போதிலும், அவற்றை நாம் இன்று முன்னெடுத்து வருகின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here