மட்டு.வந்தாறுமூலையில் பொதுநூலகக்கட்டடம் மக்களிடம் கையளிப்பு-கிழக்கு முதல்வர் பங்கேட்பு

0
238

மட்டக்களப்பு-வந்தாறுமூலைப் பகுதியின்  மாணவர்கள் மற்றும் மக்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக்கட்டடம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் 70 இலட்ச ரூபா செலவில் இந்த பொதுநூலகக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது நூலகத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 09.10.2017ம் இடம்பெற்றது. இதன் போது, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க.துரைராஜசிங்கம், பிரதி அவைத்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். nool 01 nool 02 nool 03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here