மட்டு-இலுப்படிச்சேனையில் பொது நூலகக்கட்டடம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு

0
119

மட்டக்களப்பு-இலுப்படிச்சேனைப்பகுதி  மாணவர்கள் மற்றும் மக்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக்கட்டடம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் நெல்சிப் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்ட 70 இலட்ச ரூபா செலவில் இந்த பொதுநூலகக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது நூலகத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 09.10.2017ம் திகதி இடம்பெற்றது. இதன் போது, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க.துரைராஜசிங்கம், பிரதி அவைத்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர் கலந்து  கொண்டிருந்தனர்.ilu 01 ilu 02 ilu 03 ilu 04

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here