ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உளவளத்துனை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

0
182

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

mmmகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா அவர்களின் வழிகாட்டலில் சமூர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத் தலைமையில் சமூர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் உளவளத்துனை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் க.பொ.த உயர்தரப் பரீட்ச்சை எழுதிய மாணவர்கள் மற்றும் சமூர்த்தி உதவி பெறுவோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இந்நிகழ்வில் வளவாளர்களாக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் பைசல், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம்.சித்தீக், சமூர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.பசீர், ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம். சாஜஹான், மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.(F)iiii nnnn vvvv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here