அமளிக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபையில் 20ஆவது சீர்திருத்த வாக்கெடுப்பு வெற்றி

0
173

சப்னி அஹமட்
மாகாண சபைகள் அதிகாரம் மற்றும் இதர சட்டங்களை உள்ளடக்கிய 20ஆவது சட்டமூலம் சற்று முன்னர் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. பலத்த சந்தேகத்துடன் மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலபதி தலைமையில் இன்று காலை 9.30 க்கு கூடியது. அதன் போது, அவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகியில்லாத காரணத்தால், மீண்டும் 11.30 ஒத்தி வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட 11.30க்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பிரசன்னமின்மை காரணமாக சபை நடவடிக்கை மீண்டும் மதியம் 1.00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் போது, பெரும் அமளி துமளியுடன் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த சட்ட மூலம் சபையில் நிறைவேறியதும் சபை நடவடிக்கை முடிவுறுத்தப்பட்டன.
24 ஆதரவுகளும், 08 எதிர்ப்பான வாக்களிப்புடன் வெற்றி பெற்றதுடன் 01 நடுநிலமையும் பேணப்பட்டது. 21430426_1611756792199423_4033435810331020022_n 21617716_1611757318866037_9450586396444204_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here