இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவிடுங்கள்-முஸ்லிம் வொய்ஸ் இணையத்தளம்

0
177

1சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் படகு மூலம் பயணித்த நிலையில் கரையோதுங்கிய  (31) மியன்மார்- ரோஹிங்ய அகதிகள் தஞ்சமைடைந்த நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனைவரும் அறிவர். அதற்கு முன்னரும், நான்கு பேர் மன்னாருக்கு படகு மூலமும், ஒருவர் பங்களாதேஷ் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமானம் மூலமும் இலங்கை வந்து UNHR அமைப்பில் பதிவு செய்யப்பட்டு இன்று கொழும்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன், முஸ்லிம் வொய்ஸ் நடத்திய நேர்காணலில் இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைத்திரட்டி, பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்ய அகதிகளுக்கு நேரடியாக அங்கு சென்று உதவிகளைச் செய்ய எதிர்பார்த்துள்ளோம். மனித நேயம் படைத்தவர்களும், விரும்பியவர்களும் உங்கள் உதவிகளை அந்நாட்டில் அகதிகளாக இருப்பவர்களுக்கு செய்யலாம்.

தாருல் ரஹ்மா நலன்புரி சங்கம் மற்றும் முஸ்லிம் வொய்ஸ் இணையத்தளம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்ய அகதிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கான உதவிகளைச் செய்யும் பணியில் விரும்பும் தனி நபர்களும், அமைப்புக்களும், நிறுவனங்களும் எங்களுடன் இணைந்துக் கொள்ளலாம்.

உங்கள் உதவி ஒத்தாசைகள் மற்றும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.

ரோஹிங்ய அகதிகளுடனான நேர்காணல் – https://www.facebook.com/muslimvoice.lk/videos/1908008802792733
www.muslimvoice.lk / www.dharulrahma.org/

dharulrahma Welfare Association
Bank of Ceylon,
Central super market branch,
Colombo 11, Sri Lanka.
Account number 70714705
Swift – bceylklx01 2 3 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here