குச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணிப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு

0
209

IMG_1043 (Medium)எம்.ரீ.ஹைதர் அலி
திருமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட குச்சவெளி இலந்தைகுளம் முஸ்லிம் வித்தியாலத்திற்கான காணிப்பிரச்சினை கடந்த சுனாமிக்குப்பின்னர் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். அன்று முதல் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த காணிப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவருமான ஆர்.எம். அன்வரின் முயற்சியினால் நிரந்தரத்தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் மாகாணக்காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் மொஹமட், பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு குறித்த பாடசாலைக்காணி தொடர்பாக  திருமலையிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் 2017.09.11ஆந்திகதி திங்கட்கிழமை ஆராயப்பட்டு நிரந்தரத்தீர்வு பெறப்பட்டுள்ளது.

பாடசாலைக்கான தகுந்த காணியினை ஏலவே வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் விஸ்தீர்ணமுள்ள காணி ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள ஆசிரியர் விடுதிக்குமான காணி பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்பான்மை இனத்தைச்சேந்த ஒருவருக்கு சுமார் 80 பேர்ச் காணி இருப்பதாக பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தமை குறித்த நபருக்கான 80 பேர்ச் காணியினை பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வேறொரு பகுதியில் மாற்றுக்காணியினை வழங்க
இச்சந்தர்ப்பத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இது விடயமாக குறித்த பகுதிக்கான வலயக் கல்விப்பணிப்பாளர் மாகாணக்காணி ஆணையாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்புமிடத்து, அவற்றை பாடசாலைக்கு விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென்றும், குச்சவெளி பிரதேச செயலாளர் காணி பயன்பாட்டு குழுவிற்கு சமர்ப்பித்து அவற்றை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாகவும் நிரந்தர முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது.

அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டதுடன், குறித்த காணி விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.IMG_1010 (Medium) IMG_1032 (Medium) IMG_1034 (Medium) IMG_1037 (Medium) IMG_1043 (Medium)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here