Pet ஸ்கேனருக்காகச் சேகரிக்கப்பட்ட 252 மில்லியனுக்கு என்ன நடந்தது?

0
86

WhatsApp Image 2017-09-12 at 7.31.51 AMஆரிப் எஸ்.நளீம்

மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்காக Pet ஸ்கேனர் இயந்திரத் தேவையினை உணர வைத்த முஹம்மது  உமைட் உயிர் நீத்தார். அவரது கடைசியும் ஆசை நீர்மூலமானது.

உமைட்டின் தந்தை தன் மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கவலையடைகிறார். பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டும் Pet இயந்திரம் இலங்கையில் இல்லையெனச் சொல்லப்படுகிறது. தன்னிடம் பணமிருந்ததால் மகனை அழைத்துக்கொண்டு வைத்தியப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்கிறார் அவர்.

இதே நேரம், அவரின் மனதில் ஒரு பொது நலச்சிந்தனை உதிக்கிறது. நோய் என்பது ஏழை பணக்காரனோ வயது பால் வேறுபாடோ பார்த்து வருவதில்லை. இல்லாத ஏழை எளியவர்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதே அவரின் சிந்தனை. உடனே அவருக்கொரு யோசனை தோன்றுகிறது. நமது நாட்டு மக்களிடம் Pet ஸ்கேனர் தேவையினை முன்வைப்போம். அதற்காக ஊடகங்களின் உதவியை நாடுவோம்.

இந்தப்பிரசாரத்துடன், இவ்வியந்திரத்துக்காக பொது மக்களால் 252 மில்லியன்  ரூபா சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சிடம் கையளிக்ப்பட்டது. இருப்பினும் இன்னும் Pet இயந்திரம் பொறுத்தப்படவில்லை. மக்கள் செலுத்தும்  வரி மூலம் சொகுசு வாழ்கை வாழும் அமைச்சர்கள் அவர்களுக்கான  வாகன இறக்குமதி இன்னோரன்ன தேவைகளுக்காக விரைந்து செயற்படும் இதே வேளை, ஏன் மனித உயிர்களோடு சம்பந்தப்பட்ட Pet ஸ்கேன் இயந்திரக் கொள்வனவுக்காக அக்கரை கொள்ளவில்லை.

உலக நாடுகளிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அபிவிருத்தி எனும் பெயரில் பலன் தராத திட்டங்களுக்காக முன்நின்று இந்த அமைச்சர்களால் செயற்பட முடியுமென்றால், பொது மக்கள், ஊடகங்கள் எனச்சேகரித்த பணம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் ஏன் இன்னும் Pet ஸ்கேன் இயந்திரம் பொறுத்தப்படவில்லை? கொமிசன் கிடைக்காது என்பதாலா? இவ்வாறான அசமந்தப்போக்கு செயற்பாட்டின் மூலன் மக்களின் சாபமே உங்களுக்கு உண்டாகும்.WhatsApp Image 2017-09-12 at 7.31.51 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here