ஜதுரிகா சிறிசேனவின் "ஜனாதிபதி தாத்தா" வில் மர்ஹூம் இஸ்மாயீல் நினைவு கூறப்படுவாரா?

0
238

Untitled-1ஆரிப் எஸ்.நளீம்
ஜனாதிபதி தாத்தா எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் 15.09.2017ம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அறிய வருகிறது. மைத்திரி பால சிறிசேனவின் புதல்வி ஜதுரிகா சிறிசேன இந்நூலை எழுதியுள்ளார்.

அன்று முதல் இன்று வரையில் தான் அறிந்த தனது தந்தை பற்றி வரலாற்று நிகழ்வுகளை, அவர் எதிர்நோக்கிய சவால்களை அதில் எழுதியுள்ளாராம்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் வரலாற்று நிகழ்வுகள் எழுதப்படுகிற போது, இஸ்மாயில் எனும் கதாபாத்திரம் அத்துடன் இணைக்கப்படவில்லையாயின், அவ்வாரலாறு முற்றுப்பெற்றதாக, நிறைவு பெற்றதாகக் கருத முடியாது.

மைத்திரி பாலவின் அரசியல் வரலாற்றிலிருந்து இஸ்மாயில் எனும் காதாநாயகனை மறைக்கவோ மறுக்கவோ புறமொதுக்கவோ முடியாது. ஐ.தே.கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட பொலன்னறுவைத் தேர்தல் தொகுதியை லோட் நெல்சனிடமிருந்து  மைத்திரியோடு இணைந்து வெற்றி கொள்ள பகிரதப்பிரயத்தனம் மேற்கொண்டவர் மர்ஹூம் இஸ்மாயில்.

சு.கட்சியின் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தனக்கென இருந்த ஒரேயொரு அரிசி ஆலையையும் அடகு வைத்தார். மட்டுமல்லாது ரோஸி எனப்பெயரிடப்பட்டிருந்த ISUZU TXD ரக லொரியும் விற்பனை செய்தார். எனது சிறிய வயதில் ரமளான் காலங்களில் பச்சை பள்ளிவாயலில் கஞ்சு வாங்கிக் கொண்டு மர்ஹும் இஸ்மாயில் வீட்டுக்கு ஐஸ் தண்ணீர் எடுக்கப்போயிருக்கிறேன்.

பல தடவை அங்கே மைத்திரிபால சிறிசேன மர்ஹூம் இஸ்மாயில் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மர்ஹூம் இஸ்மாயிலைப் பார்த்தால் எங்களுக்கு நடுக்கம் பிடிக்கும் யாருக்கும் அஞ்சாத தைரியமிக்க அரசியல்வாதியாகத்திகழ்ந்தார் அவர்.

அக்காலப்பகுதியில் ரணில் ஐ.தே.கட்சியை விட்டுச் சென்றாலும், நான் அக்கட்சியை விட்டுச்செல்லமாட்டேன் என சொல்லிக்கொண்டு திரிந்த உடையிலும் பாவனை பொருளிலும் பச்சை நிறத்தைப் பயன்படுத்தும் தீவிர ஐ.தே.கட்சி ஆதரவாளரான பச்ச பண்டய்யா ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கட்டி வைக்கப்பட்டு ரயில் அருகே வருகையில் அவரின் கட்டு அவிழ்த்து விடப்பட்டது.

மர்ஹும் இஸ்மாயிலே தன்னை ரயில் தன்டவாளத்தில் கட்டி வைத்ததாகவும் அது துகில் நிறைந்த பயங்கர நிகழ்வு என்றும் அந்நிகழ்விலிருந்து வழமைக்குத்திரும்ப நீண்ட நாட்கள் எடுத்ததாகவும் பண்டய்யா இப்போது கேட்டாலும் சிறித்துக்கொண்டே  சொல்வார்.

எனவே தான் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கட்சியின் வெற்றிக்காக பல சவால்களை எதிர்கொண்டவர் மர்ஹூம் இஸ்மாயில், தம்பாளையில் இடம்பெற்ற அரசியல் பிராசார மேடையில் வைத்து இவரைக் படுகொலை செய்யும் நோக்குடன் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், ஆதரவாளர்கள் ஒருவர் மரணமடைந்ததுடன், பலர் காயங்களுக்குள்ளாகினர்.

இவ்வாறு உயிரச்சுறுத்தல்கள் எதிர்கொண்டே மைத்திரிக்கு உற்றதுணையாக நின்று உழைத்தார் மர்ஹூம் இஸ்மாயீல். இது போல பல சம்பவங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது. இவைகளையெல்லாம் ஜதுரிக மறந்திருக்க வாய்பில்லை. அவரின் ஜனாதிபதி தாத்தா எனும் நூலில் மர்ஹூம் இஸ்மாயிலைப் பற்றியும் எழுதியிருப்பார் என நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here