வரி கூட்ட வேண்டியது சீனிக்கல்ல: சாராயத்துக்கு – ஹுதா உமர்

0
232

1888557_725910087441812_123767518_nநல்லாட்சி அரசின் யுக்திகள் மக்களை முட்டாள்களாக்கி நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் படுகுழியில் தள்ளுவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகவுள்ளது. நாட்டு மக்களின் மீது அதிக அக்கறை கொண்ட அரசாக இருந்தால், நாட்டு மக்களின் மீது அன்பும் அவர்களின் சுகாதாரத்தின் மீது அக்கறையும் கொண்ட அரசாக இருக்க ஆசையிருந்தால், வரிவித்திப்பதைத் தவிர்த்து மாற்று வழியை காட்ட முன்வர வேண்டும்.

நாட்டு மக்களின் அத்தியாவசியப் பொருட்களான சீனி, பருப்பு, கோதுமை, மிளகாய், உப்பு, எண்ணெய் போன்றவை அதிக தீங்கை விளைவிப்பதாக இந்த நல்லாட்சி கருதினால் இதற்கு மாற்றமாக, சிரியளவிலாலான பாதிப்புக்களை உண்டாக்கும் பொருட்களை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த முன்வரவேண்டும்.

இதனைவிட தீவிர, நோய்களை உண்டாக்கும் புகையிலை உற்பத்திகளையும் மதுபான உற்பத்திகளுக்குமான வரியை மிக அதிகாமாக அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

நீரிழிவை காரணங்காட்டி சீனியின் வரியையும் கொழுப்பைக் காரணம் காட்டி எண்ணையின் விலையையும் இன்னோரன்ன நோய்களை காரணங்காட்டி மற்றும் பல அத்தியாவசியப்பொருட்களின் விலையையும் சுற்றாடலின் மாசுபடலை காரணம் காட்டி, பெற்றோல், டீசல் போன்றவற்றின் விலையையும், வரியையும் உயர்த்தி இந்த நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களின் முதுகில் மாத்திரமில்லாது, நெஞ்சிலும் குத்தும் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக இந்த நல்லாட்சியின் அரசியல்வாதிகள் முன்னெடுப்பது வேதனையானவொன்றே.

நடுத்தர வர்க்க மக்களை அதிகப்படியாகக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாட்டுக்கு அதிகவரி ச்சுமை மக்களால் சுமக்க முடியாத சுமையென்பதை அரசியல் முக்கியஸ்தர்கள் அறிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் கடனை அடைக்க வேண்டும். நோய்களை ஒழிக்க வேண்டுமெனக்கூறும் நமது அரசு அதற்கெல்லாம் வரியை உயர்த்துவதைத் தவிர்த்து, பதுக்கல் முதலைகளின் பதுக்கல்களை வெளிக்கொணர்ந்தாலும் அரச வைத்தியசாலைகளைச் சீராகப் பராமரித்தாலும் போதும் எமது தேசம் ஐக்கிய அமெரிக்காவினை விட செல்வாக்கான நாடாக இருக்குமென்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர்
தலைவர்-அல்-மீஸான் பௌண்டசன்
ஸ்ரீலங்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here