சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து உலகத்தலைவர்களுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மலேசியாவில் ஆராய்வு

0
232

5850dc23-152a-4b94-b4d1-38b5bd6cb31b(ஆர்.ஹஸன்)
மலேசியாவில் நடைபெறுகின்ற “நிலையான அபிவிருத்தி” தொடர்பான மாநாட்டில் பங்கேற்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அதில் கலந்து கொண்டுள்ள உலக நாட்டுத்தலைவர்கள் பலரைச்சந்தித்து, சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

அதற்கமைய, ஈக்வடோர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி  ஜமீல் மஹுத், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆளுனர் ஹெர்மிலாந்தோ மந்தனாஸ், பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ், மலேசியாவின் பேராக் மாநில முதலமைச்சர், உயர் கல்வியமைச்சர் மற்றும் இரண்டு தடவை விண்வெளிக்குச் சென்ற அமெரிக்கா பெண் விஞ்ஞானி டாக்டர் கத்ரினா கெடி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஈக்வடோர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்த போது, சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன் போது, இலங்கை மற்றும் ஆசிய நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் கேட்டறிந்து கொண்ட அவர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களை தான் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

அதே போன்று, பிலிப்பைனஸ் நாட்டின் ஆளுனர் ஹெர்மிலாந்தோ மந்தனாஸ், பேராக் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ் ஆகியோருடனான சந்திப்புக்களில் ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாகவும், கல்வி அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 6d779298-6796-4b6e-98f2-7a2fa3b51bf7 5850dc23-152a-4b94-b4d1-38b5bd6cb31b a424fb69-3287-43a1-8a49-fb109e519e62 c1fb7cb4-d8ce-4b45-aaf2-67f239c9d2ea

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here