ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக ஒன்றுபடுவோம்-AUM.நளீம் (ஸலாமி)

0
253

21733602_1778874245743710_956026596_oஅன்பின் இனிய உறவுகளே…
கடந்த சில நாட்களாக எமது உறவுகளான ரோஹிங்கிய முஸ்லிம்களின் துயரங்களையே சகல ஊடகங்களிலும் பார்க்க முடிகிறது. மியன்மார் அரசின் ஆதரவுடனும் அங்குள்ள பாதுகாப்புப்படைகளின் முழு ஒத்துழைப்புடன் இவ்வாறான நிகழ்வுகள் காலத்துக்கு காலம் இடம்பெற்று வந்தாலும் இம்முறை அம்மக்களின் பாதிப்பு சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்யுமளவுக்கு உக்கிரமடைந்திருக்கிறது.

இதன் விளைவாக சர்வதேசளவில் அம்மக்களுக்கு ஆதரவாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. எமது நாட்டிலும் இதன் தொடரில் பல கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3000 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், எமது கல்குடாப்பிரதேசத்தில் கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயலில் ஜும்ஆத்தொழுகையின் பின்பு ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆத்தொழுகையின் பின் ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் வாழைச்சேனை ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், கணிசமான முஸ்லிம்களைக் கொண்ட எமது பிரதேசத்தில் ஏன் சகலரையும் ஒன்றிணைத்து பாரியளவிலான ஒரு கண்டனப் பேரணியை நடத்த முடியாதுள்ளது.

எனது பார்வையில் இப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல்கள், விளையாட்டுக்கழகங்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், சமூக சேவை நிறுவனங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை இப்பேரணியினை ஏற்பாடு செய்தால் மிகவும் சிறப்பாக அமையும்.

இப்பேரணியினை பாரிய சக்தியாக நாம் ஒன்றிணைந்து வெளிக்காட்டும் போது, அது அம்மக்களின் விமோசனத்திற்கும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் உதவியாக அமையும்.

எனதன்பின் உறவுகளே, அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் அம்மக்களின் விடியலுக்காய் அல்லாஹ்விடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரார்த்திப்போம்.

AUM.நளீம் (ஸலாமி)21733602_1778874245743710_956026596_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here