கிழக்கு முதலமைச்சரின் 15 மில்லியன் நிதியில் ஓட்டமாவடி தாறுல் உலூமில் மூன்று மாடிக்கட்டடம்

0
291

DSC_1639முதலமைச்சரின் ஊடகப்பிரிவு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் 15 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டடம் நேற்று 23.09.2017ம் திகதி புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.பைஷல் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டு பாடசாலைக்கட்டடத்தினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கேபி.எஸ்.ஹமீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜி ஆகியோருடன் அதிகாரிகள், அபிவிருத்திக்குழுவினர் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வெறும் தகரக்கொட்டிலொன்றில் இயங்கி வந்த குறித்த இப்பாடசாலையின் அவல நிலையினை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு 150 மில்லியன் நிதியொதுக்கீடு செய்து இப்பாடசாலையை மூன்று மாடிகளாக நிர்மாணித்து பூர்த்தி செய்து திறந்து வைத்துள்ளதுடன், குறித்த பாடசாலையில் 250 ஆரம்பப்பிரிவு மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்குடாவின் கல்வி அபிவிருத்தியிலும் மாவட்ட, மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியிலும் அதீத அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் கிழக்கு முதல்வர் மாகாணக்கல்வி  அபிவிருத்திக்காக அதிகளவான நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கது.DSC_1637 DSC_1639 DSC_1672 DSC_1704 DSC_1707 DSC_1714

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here