பொலன்னறுவைத்தொகுதி புதிய அமைப்பாளர் பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) மற்றும் அலி ஸாஹிர் மெளலானா எம்பி சந்திப்பு

0
325

WhatsApp Image 2017-09-14 at 1.51.11 AMஅண்மையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களினால் பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவைத்தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி)  அவர்களை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா நேற்று  13.09.2017ம் திகதி அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சிநேகபூர்வ சந்திப்பாக இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இளம் தொழிலதிபரான பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி)  அவர்களின் நியமனம் இப்பிரதேச மக்களின் அரசியல், அபிவிருத்தியில் மாற்றத்தைக் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாறான மேல் மட்ட அரசியல் தொடர்புகளும் ஜனாதிபதியின் நேரடி ஆதரவும் அவரது நோக்கத்தையும் பொலன்னறுவை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் என எதிர்பார்க்கலாம்.

பல்வேறு தேவைப்பாடுகளுடன் காணப்படும் தனது மாவட்ட மக்களுக்கு இவ்வாறான மேல் மட்ட அரசியல் தொடர்புகளை கட்சி பேதங்களுக்குப்பால் முன்னெடுக்கின்ற போது, தான் அடைய நினைக்கின்ற அடைவுகளை முடிந்தளவு அடைந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையலாம். WhatsApp Image 2017-09-14 at 1.51.00 AM WhatsApp Image 2017-09-14 at 1.51.11 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here