பொத்துவிலில் "தோப்பாகிய தனி மரம்" மர்ஹூம் அஷ்ரஃப் நினைவேந்தல்

0
238

index(பிறவ்ஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம்  எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனி மரம்” எனும் தலைப்பில் எதிர்வரும் 16ஆம் திகதி பி.ப. 3.30 மணிக்கு பொத்துவில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கு பொத்துவில் அமைப்பாளர் அப்துல் வாஸித் தலைமை தாங்குவார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

உமா வரதராஜன், எஸ்.எச். ஆதம்பாவா, எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி விசேட தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர். அத்துடன், அஷ்ரஃப் பற்றிய ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதே வேளை, அஷ்ரஃபின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் நடைபெற்ற “அழகியதொனியில் அல்குர்ஆன்” போட்டியில் வெற்றி பெற்றவர்களின் மீள் அரங்கேற்றம் பிரமாண்டமான மேடையமைப்புடன் ஒலி, ஒளி நிகழ்வாக அன்றைய தினம் மேடையேற்றப்படவுள்ளது.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ.ல.முகா தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீமின் ஊடக ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here