கொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா

0
273

Nahiyaa(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தமிழின் மூத்த படைப்பாளிகளும், தகைசான்ற ஆளுமைகளும், தமது வாழ்வியல் அனுபவங்கள், கலை இலக்கிய நட்பு எழுகைகள், பண்பாட்டுத்தாக்கங்கள், படைப்பு முயற்சிகள் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் முன்னாள் அரச சேவைகள் ஆணைக்குழு உறுப்பினரும் புனர்வாழ்வுப் பணிப்பாளர் நாயகமுமான ஏ. எம். நஹியா கலந்து கொண்டு உரையாற்றினார். தான் இந்நிலையை அடைந்த வரலாற்றுப்பாதையை அவரின் சொற்பொழிவு தொட்டுக்காட்டியது.

தன்னுடைய குடும்பம், கற்ற பாடசாலைகள், பல்கலைக்கழகம், வகித்த பதவிகள், அவற்றில் அவர் எதிர் கொண்ட சவால்கள், நிகழ்த்திய சாதனைகள் பற்றியெல்லாம் தன்னுடைய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொன்னார்.

பெருந்திரளானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில், முன்னாள் இந்து சமய கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சர் பீ.பீ. தேவராஜ் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நஹியாவைக் கௌரவித்தார்.

தமிழ்ச்சங்க தலைவர் தம்பு சிவ சுப்ரமணியம் தலைமையில் அண்மையில் தமிழ்ச்சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சின் செயலாளர்கள், கல்விமான்கள், அரச அதிபர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப்பலதரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நஹியா உரையாற்றுவதையும், முன்னாள் அமைச்சர் பீ.பீ. தேவராஜ் நஹியாவுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பதையும் அருகில் தமிழ்ச்சங்கத் தலைவர் நிற்பதையும் படத்தில் காணலாம்.Nahiyaa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here