திருத்தங்களுடன் கூடிய 20வது திருத்தச்சட்டத்தையே ஏற்றுக்கொண்டுள்ளோம்-தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம்

0
221

DSC_0172எஸ்.எம்.எம்.முர்ஷித்

20வது திருத்தச்சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருத்தச்சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவை வழங்கியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் 5.5 மில்லியன் ரூபா செலவில் வாழைச்சேனை மயிலங்கரச்சி பிரதேச பிரதான வீதி காபட் இடுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

20வது திருத்தச்சட்டமானது மாகாண சபைகளினுடைய தேர்தல்கள் ஓரே நேரத்தில் நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது ஏற்கனவே இருக்கின்ற பாராளுமன்ற திருத்தத்தின் படி பாராளுமன்றத்தேர்தல் தொகுதி அடிப்படையிலும், உள்ளூராட்சித்தேர்தல் வட்டாரங்கள் அடிப்படையிலும் நடைபெறவிருக்கின்றன.

அதே போன்று, மாகாண சபைத்தேர்தல்களும் மாகாண, வட்டாரங்கள் என்ற அடிப்படையில் நடைபெற வேண்டி இருக்கின்றது. இவற்றை உள்ளடக்கியதாக வந்த திருத்தத்தில் மாகாண சபைகளைக் கலைக்கின்ற அதிகாரம் பாராளுமனறத்திற்கு கொடுக்கக்கூடிய விதத்தில் 20வது திருத்தச்சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தது.

இந்த ஏற்பாட்டிற்கு எமது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்ப்புத்தெரிவித்து, அதற்கான திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று இது தொடர்பான அமைச்சர்களோடு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரோடும் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அந்த வகையில், முதற்தடவையாகக் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச்சட்டத்தை நாங்கள் கடந்த 07ம் திகதி மாகாண சபையில் விவாதிப்பதில்லையென்று தீர்மானித்து திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.

அதே நேரத்திலே ஏனைய மாகாண சபைகளும் இதேவித அபிப்பிராயங்களைத் தெரிவித்தன. அந்த வகையில், அதற்கான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டிய விடயம் உணரப்பட்டு, அச்சட்டமூலத்திற்கான திருத்தத்தை உயர் நீதிமன்றத்திலே சமர்ப்பித்திருந்தார்கள். இதன் படி கடந்த 11ம் திகதி நடைபெற்ற மாகாண சபையிலே இந்தத் திருத்தத்தை உள்ளடக்கியதான 20ம் திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவு என்கின்ற எமது அபிப்பிராயத்தை நாங்கள் தெரிவித்திருந்தோம்.

இச்சட்டத்தின் அடிப்படையில் இந்தச்சட்டமூலம் அமுலாக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற மாகாண சபைகள் கலைய வேண்டுமென்றும் எங்களுடைய மாகாண சபை கலையவிருக்கின்றது என்ற அடிப்படையில், கிழக்கு மாகாண சபை உட்பட இன்னும் இரண்டு மாகாண சபைகள் கால நீடிப்புச் செய்யப்படக் கூடியதாகவும் ஒரே நாளில் மாகாண சபைத்தோத்தல்கள் நடைபெறக் கூடியதாகவும் அமையும் மாகாண சபைகளுக்குரிய வட்டார அடிப்படையிலே நடைபெறக்கூடியதாகவும் இருக்கும் என்கின்ற அந்த ஏற்பாட்டுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையில் இது 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதில் குறிப்பாக நாங்கள் சொல்லப் போனால் 20வது திருத்தச்சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருத்தச்சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.DSC_0136 DSC_0152 DSC_0172

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here