ஏ.எல். தவத்தின் முயற்சியால் அக்கரைப்பற்று இரு பாடசாலைகள் தரமுயர்வு

0
206
பிறவ்ஸ்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (15) நடைபெற்ற “மரம் வளர்த்த மண்” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயம் (பெண்கள் பாடசாலை), சம்சுல் உலூம் வித்தியாலயம் என்பன இன்று தரமுயர்த்தப்பட்டன.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் சீ. தண்டாயுதபானி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.IMG_4265 IMG_4288 IMG_4302 IMG_4408 IMG_4436 IMG_4458 IMG_4246

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here