மியன்மார் அரசைக்கண்டித்து ஓட்டமாவடி-காவத்தமுனையில் ஆர்ப்பாட்டம்

0
309

pro (1)எஸ்.எம்.எம்.முர்ஷித்
ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கெதிராக மியன்மார் அரசும், அந்நாட்டின் பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்புக்கும் எதிர்ப்புத்தெரிவித்து இன்று 15.09.2017ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி-காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆப் பள்ளிவாயல் முன்பாக எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

காவத்தமுனை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல் ஹாபிழ் என்.எம்.எம்.சியாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர்.

காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில் காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழகம், மதினா கடற்றொழிலாளர் கிராமிய அமைப்பு என்பன ஒன்றினைந்து இக்கவனயீர்ப்புப் பேரணியை நடாத்தினர்.

காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆப் பள்ளிவாயல் முன்பாக ஆரம்பமான எதிர்ப்புப்பேரணி வாழைச்சேனை கடதாசி ஆலை முன்பாக முடிவடைந்து, அங்கு மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுயிகுயின் கொடும்பாவி எரிக்கப்பட்டதுடன்ä, நாட்டின் ஜனாபதி, பிரதமர் மற்றும் மியன்மார் தூதரகம் ஆகியோருக்கான மகஜரினை காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழக தலைவரால் பள்ளிவாயல் தலைவர் எம்.காதரிடம் கையளிக்கப்பட்டது.pro (1) pro (2) pro (3) pro (4) pro (5) pro (6) pro (7) pro (8) pro (14) pro (15) pro (16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here