மட்டு.மாவட்டத்தில் இனவாதம் புற்றுநோயாகக் காணப்படுகின்றது-பிரதியமைச்சர் அமீர் அலி

0
319

IMG_9751எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம், இனத்துவேசத்தைப் பேசுவது ஒரு புற்றுநோயாகக் காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாகக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனவாதம் மற்றும் இனத்துவேசத்தைப் பேசி எதையும் சாதித்து விட முடியாது. தேர்தல் வந்தால் மாத்திரம் தான் மட்டக்களப்பு மாவட்டத்திலே இனவாதம் பேசப்படும். அது இந்த மாவட்டத்தில் காணப்படும் புற்றுநோயாக நான் பார்க்கின்றேன்.

மற்றைய நாட்களின் யாரும் பேசுவது கிடையாது. அதைப்பற்றிச் சிந்திப்பது கிடையாது. ஆனால், அரசியல்வாதிகள் இனவாதம் பேசத் தொடங்கி விட்டார்கள் என்றால், நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் தேர்தல் வரவுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றீர்கள். கடந்த கால யுத்தத்தால் தங்களது உறவுகள், உடமைகள் என்று எல்லாவற்றையும் இழந்த படுவான்கரை சமூகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் சமூகம் வாழ்வாதாரமில்லாமலிருக்கின்ற முகவரியாகப் பேசிக் கொண்டிருக்கின்ற விடயமாகக் காணப்படுகின்றது.

நமது பகுதியில் கட்டுமானங்கள், அபிவிருத்திகள், வாழ்வாதாரங்கள் எதுவுமில்லையென்று சொன்னால் நாமிருப்பதற்குப் பெறுமதியில்லை. எல்லாமே இல்லை என்று சொன்னால் நாங்களும் இல்லாதவர்கள் தான். இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரென்று சொன்னால் நீங்கள். சரியாகச் சிந்திக்கவில்லையென்ற காரணத்தினால் தான் எதுவுமில்லையென்று கூறுகின்றீர்கள்.

நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். மண்ணின், இனத்தின், சமூகத்தின், போராட்டத்தின் பெயரால் கடந்த காலத்தில் எல்லாவற்றையும் இழந்தும் இன்னும் முறுக்கேறுகின்ற வீரவசனத்திற்கு அல்லல்பட்டுச் செல்வீர்களளென்றால் அது எங்களுடைய பிழையல்ல.

இந்த அரசாங்கத்தில் தமிழரோ முஸ்லிமோ ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வர முடியாது. நமக்கு என்ன தீர்வைத்தருவதாக இருந்தாலும், நமக்கு பிச்சை போடுவதாக இருந்தாலும் சிங்களத்தலைவர்கள் தந்தால் மாத்திரம் தான் நமக்கு கிடைக்கும்.

இன்று கிடைக்கும் நாளை கிடைக்குமென்று முப்பது வருடங்களைக் கடந்திருக்கின்றோம். தமிழ் மக்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். நியாயம் பிறக்கப்பட வேண்டுமென்று நான் நூறு வீதம் உடன்படுகின்றேன்.

இவை கிடைக்க வேண்டுமென்பதற்காக நாங்கள் வெறுமனே உண்ணாமல், பிள்ளைகளைக் கல்வி கற்பிக்கால், ஊரையும் முன்னேற்றாமல், வாழ்வாதாரத்தைத்தேடிக் கொள்ளாமலலிருப்போமென்று சொன்னால் குளம் வந்தும் என்று கொக்கு குடல் வெடிச்சிச்செத்தது. இந்த நிலவரத்திற்குள் நீங்கள் வந்து விடக்கூடாதென்பது எனது பிரார்த்தனை என்றார்.

பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.லோகநாதன், எஸ்.றிஸ்மின், வவுணதீவு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்ä, பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதியொதுக்கீட்டின் மூலம் தூர இடங்களிலிருந்து பாடசாலைக்குச்செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் இருபது மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஒரு துவிச்சக்கர வண்டி 14500.00 வீதம் இறுபது துவிச்சக்கர வண்டிகளுக்கும் இரண்டு இலட்சத்தி தொன்னூறு ஆயிரம் ரூபா நிதியில் வழங்கப்பட்டது.

பிரதியமைச்சருக்கும் பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.லோகநாதன் ஆகியோருக்கு பிரதேச மக்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.IMG_9722 IMG_9726 IMG_9727 IMG_9739 IMG_9745 IMG_9751 IMG_9756 IMG_9764 IMG_9768 IMG_9769 IMG_9777 IMG_9791

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here