நம் குரல் அஷ்ரபே! – முனையூரான் எம்.எம்.ஏ.ஸமட்

0
285

நம் குரல் அஷ்ரபே !
புது மலர் வாசமே !
நாளை நம் மண்ணிலே
நாளும் புது ஊர்வலம்!

தலைவனே! தலைவனே!
நம் உயிர்த்தலைவனே !
என்றும் உன் மூச்சிலே
வாழும் நம் மக்களே !

தலைவனே! தலைவனே!

ஜென்ம ஜென்மங்கள் ஒன்றாக நாம் வாழலும்
தலைவா நாம் காணும் ஆகாயம் நீயாகனும்
என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் வெற்றி தானே எம் சூரியோதயம்

தலைவா நீ இல்லையே இங்கு நாமில்லையே
வீரம் உன் காவியம்
நீ எம் உயிரோவியம்
வீரனே வா தியாகியே வா
நம் தலைவனே நீ வா வா

நம் குரல் அஷ்ரபே !
புது மலர் வாசமே !
நாளை நம் மண்ணிலே
நாளும் புது ஊர்வலம்

இன்று நம் பாதை உன்னாலே பூ பூத்தது
தலைவா! உன் கண்ணில் நம் உரிமை தெரிகின்றது
உந்தன் பெயர் கூட சங்கீதமாகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது.

ஓடும் மந்தைக் கூட்டம் இல்லை என்றாகலாம்
அமைச்சர் நூறாகலாம் யாவும் பொய்யாகலாம்
உண்மையே தினம் எம்மிடம் கூறும்
அஸ்ரபே என்றும் வாழ்க

நம் குரல் அஷ்ரபே !
புது மலர் வாசமே !
நாளை நம் மண்ணிலே
நாளும் புது ஊர்வலமே!

தலைவனே! தலைவனே!
நம் உயிர்த் தலைவனே !
என்றும் உன் மூச்சிலே
வாழும் நம் மக்களே !

(முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவரது அரசியல் வாழ்வில் சந்தித்த இரண்டவாது பாராளுமன்றத்தேர்தல் 1994ஆம் ஆண்டு நடைபெற்றது. கவிதையுலகில் நான் காலடி வைத்த காலமாகிய 1994 ஆண்டு தேர்தலும் நடைபெற்றதால், இக்காலப்பகுதில் நடைபெற்ற கூட்டமொன்றில் வாசிப்பதற்காக திரைப்பாடலொன்றைத் தழுவியதாக இக்கவி வரிகள் எழுதப்பட்டது. இருப்பினும், அவர் முன்னிலையில் இவ்வரிகள் வாசிக்கப்படவில்லையென்பது இந்நாள் வரை கவலையளித்தாலும், அவர் அகால மரணமடைந்து (2000.09.16) இன்றுடன் 17 வருடங்களாகியும் அவர் பெயர் இன்று வரை ஞாபக மூட்டப்பட்டுக்கொண்டிருக்கிறதென்பதை என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்’  என இற்றைக்கு 23 வருடங்களுக்கு முன்னர் எழுதிய இக்கவி வரி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது)

POEM -1994 JANUARY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here