க.பொ.த. உ/தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒருவார கால இஸ்லாமிய செயலமர்வு -2017

0
241

295237_102133633223405_7188685_nஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் க.பொ.த. உ/தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒருவார கால இஸ்லாமிய செயலமர்வு  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.09.2017 ( சனிக்கிழமை ) தொடக்கம் 28.09.2017 ( வியாழக் கிழமை ) வரை மீராவோடை எம். பீ. சீ. எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளி வாயல் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இஸ்லாமிய அகீதா, அல்குர்ஆன், அல்ஹதீஸ், வணக்க வழிபாடுகள், இஸ்லாமிய ஒழுக்கவியல், குடும்பவியல், இஸ்லாமிய பொருளியல், சர்வதேச இஸ்லாமிய உலகு, சிறிய குர்ஆன் சூராக்கள் மற்றும் துஆக்கள் மன்னம், போன்ற தலைப்புக்களில் இலங்கையின் தலைசிறந்த உலமாக்கள், துரைசார் அறிஞர்களைக் கொண்டு விரிவுரைகள் வழங்கப்படவுள்ளன.

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காகிதாதிகள் பகற்போசனம், உபசரணை என்பன இலவசமாக வழங்கப்படும். அத்துடன் செயலமர்வின் இறுதியில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் இறுதிப் பரீட்சையில் அதிகூடிய மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு ரூ. 5000/= .ரூ. 3000/=,  ரூ. 2000 என முறையே முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கும் அதை அடுத்து வரும் ஏழு மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
எனவே இதில் கலந்து கொண்டு மார்க்க அறிவையும் இஸ்லாமிய உணர்வையும் அதிகப் படுத்திக் கொள்ள விரும்புவர்கள் குறித்த முகவரியிலுள்ள எமது காரியாலத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

0779357420

விண்ணப்ப முடிவுத் திகதி 21.09.2017 (வியாழக் கிழமை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here