17 வருடங்களாக இறையில்லத்தில் முஅத்தினாக கடமையாற்றிய அப்துல் ஸலாம் ஓய்வு.

0
264

1 (17)மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் சுமார் 17 வருடங்களாக முஅத்தினாக கடமையாற்றி வந்த அல்ஹாஜ். அஹமட்லெப்பை அப்துல் ஸலாம் 15.09.2017 வெள்ளிக்கிழமையுடன் தனது கடமையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்கின்றார்.

மீராவோடை பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ். அஹமட்லெப்பை அப்துல் ஸலாம் இவ்இறை இல்லத்தின் பணிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதுடன், இவரது சேவைக் காலத்தில் பொறுப்பிலிருந்த பள்ளிவாயல் பரிபாலன சபையினரின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்துள்ளார். இப்பள்ளிவாயலில் முஅத்தின் கடமையை பொறுப்பேற்பதற்கு முன் எஹெலியாகொட பிரதேச பள்ளிவாயலிலும் இரண்டு வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் பரிபாலன சபையினால் 15.09.2017ஆந் திகதி வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து மேற்படி ஓய்வுபெற்றுச் செல்லும் முஅத்தினார் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பரிபாலன சபையின் தலைவர் ஜனாப். கே.பி.எஸ். ஹமீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முஅத்தின் அவர்களை பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பரிபாலன சபையினரின் பங்களிப்பில் பணப்பரில்களும் வழங்கப்பட்டது.

“இறை இல்லத்தின் கடமைக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட இவரின் மகத்தான பணியினை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் ஆரோக்கயமிக்க, நிம்மதி சந்தோசம் நிறைந்த வாழ்வை அருள்வானாக” ஆமீன்… அனைவரது பிரார்த்தனையையும் எதிர்பார்த்தவர்களாக,

பள்ளிவாயல் பரிபாலன சபையினர்
மீரா ஜும்ஆ பள்ளிவாயல்
மீராவோடை
06522570771 (1) 1 (16) 1 (17) 1 (18) IMG_20170915_195309

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here