கல்குடாவிற்கான தூய குடிநீரும், கைவிடப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையமும்: விரிவான பார்வை-சாட்டோ மன்சூர் (வீடியோ)

0
230

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கல்குடாவிற்கு வழங்கப்பட்டுள்ள தூய குடிநீரானது தூரநோக்கமற்ற செயலாகவே இருக்கின்ற அதே நேரத்தில், அரசியலில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவது போன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூஃப் ஹிபத்துல் ஹக்கீம் தனது அரசியல் காய் நகர்த்தலினை கல்குடாவில் மேற்கொண்டுள்ளார் என முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பளரும் குறித்த கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும், நாபீர் பெளண்டேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியுமான சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மீதும், கல்குடாவிற்கு குடிநீர் கொடுத்து விட்டோமென மார்தட்டிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மீதும் பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்துகின்றார்.

மேலும், ஏற்கனவே 1952ம் ஆண்டு தொடக்கம் வாகனேரிக் குளத்திலிருந்து நீர் எடுக்கப்பட்டு காகித ஆலையில் நிறுவப்பட்டிருந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வாழைச்சேனை காகித ஆலைக்கும், பாசிக்குடா மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் தூய குடிநீர் வழங்கப்பட்ட விடயம் சம்பந்தமான உண்மை நிலையினையும், வரலாற்றினையும் அறிந்து கொள்ளும் பொருட்டு மன்சூரூடன் நானும் சேர்ந்து வாழைச்சேனை காகித ஆலைக்கு கடந்த 10.09.2017ம் திகதியன்று நேரடியாக விஜயம் செய்து கவனிப்பாரற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலையினையும், அதனோடு சேர்ந்த ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராய்ந்தோம்.

அந்த வகையிலே, குறித்த விடயம் சம்பந்தமாக கல்குடாவிற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினாலும், தலைமையினாலும் கொடுக்கப்பட்ட நீர் எதற்காகக் கொடுக்கப்பட்டது? குடிநீரானது எங்கிருந்து கொடுக்கப்பட்டது? அதனால் கிடைக்கின்ற பயன் என்ன? எவ்வாறு கொடுத்தார்கள்? கொடுக்கப்பட்டுள்ள குடிநீரினால் எதிர்காலச்சமூகம் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்ளவிருக்கின்றார்கள்? போன்ற கேள்விகளுக்கும், அதனோடு சேர்ந்த யதார்த்தங்களுக்கும் விரிவான பார்வையுடன் சாட்டோ மன்சூர் தெரிவிக்கின்ற கருத்துக்களினதும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைமையின் மீதும் பகிரங்கமாகச் சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்களினுடைய விரிவான காணொளி எமது இணையதள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ-www.youtube.com/watch?v=IlL8uAsPIOY&feature=youtu.be
01 02 03 04 05 கவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here