அன்புள்ள அப்துல் றஹ்மானுக்கு…-சட்டத்தரணி பஹ்மி முஹைதீனிடமிருந்து

0
89

Untitled-1இந்த சமூகத்தின் குறிப்பாக, எமது கிண்ணியாப் பிரதேசத்தில் தங்களது கட்சியைப் பலப்படுத்த கடின முயற்சி எடுக்கின்றீர்கள். கிழக்கு மாகாணத்தில் உங்களுக்கு மட்டுமல்ல. சகல கட்சிக்காரர்களுக்கும் சவாரி செய்வதற்கும் குளிர் காயவும் எமது பிரதேசமே கைகொடுப்பது தூரதிஷ்டவசமே.

இருந்தும், முஸ்லீம்கள் சிறுபான்மைக்கட்சிகள், தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். உங்களுடன் 1998-2000ம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட Muslim Information Centre (MIC) மூலம் தொடர்பாகி, தற்போது வரை ஏதோவொரு வகையில் அவதானிப்புக்களுடனே உள்ளேன்.

இந்தச்சமூகத்திற்கு உங்கள் கல்லூரி மூலம் பாரிய பங்களிப்பைச்செய்தீர்கள். நிச்சயம் இறைவனிடம் நன்மை கிடைக்கும். இருந்தும், அரசியல் செயற்பாடுகளால் நீங்கள் புரிதல் இல்லாத போதும், சமூகம் தவறாக வழிநடத்தப்படக் கூடாதென்பதற்காகவே இதைக் கேட்கிறேன்.

நீங்கள் உங்கள் பக்க நியாயத்தை முன்வைப்பதைவிட, மற்றக்கட்சிக்காரர்களை விமர்சிப்பதும் குற்றம் காண்பதுமே அதிகம். ஆதலால், எமது சந்தேகங்களை உங்களிடம் கேட்கின்றேன். இதற்கான பதில் மூலம் உங்கள் பயணத்தில் நிச்சயம் மாற்றம் உண்டாகும்.

1-கடந்த பொதுத்தேர்தலில் மு.காவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முஸ்லீம் சமூகத்தின் நலன் தொடர்பில் கூறப்பட்டதா? மு.காவுடன் எதற்காக தேர்தல் முடிந்ததும் முரண்பட்டீர்கள்? உங்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு மு.கா வழங்கிய எழுத்து மூல ஆவணம்?

2-தேர்தல் முடிந்து மு.காவின் தலமையகம் சென்று பிரச்சனையில் கூட ஈடுபட்டீர்கள். ஆகவே, இந்த உடன்படிக்கையைப் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது பகிரங்கமாகச் சத்தியமிட்டு மக்களுக்குக்கூற முடியுமா?

3-மு.காவின் தலைவரால் நீங்கள் ஏமாற்றபட்டீர்களா? அல்லது ஹக்கீமின் சாணாக்கியத்தை  உங்கள் துரோகத்தால் தோற்கடிக்க முடியவில்லையா? என்று சமூகம் தெளிவு பெறலாம். எதிர்காலத்தில் மக்களுக்கு உண்மை தெரியலாம்.

4-உங்களுக்கு தேசியப்பட்டியல் கேட்டு தாருஸ்ஸலாமில் ஆர்ப்பாட்டம் ஒரு புறம், ஹிஸ்புல்லாவிற்கு தேசியப்பட்டியல் வழங்கக்கூடாதென்று ஜனாதிபதி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தீர்கள். இரண்டிலும் எதனை சமூகத்திற்காக நியாயப்படுத்துகிறீர்கள்?

5-உங்கள் கட்சியிலிருக்கும் நஜா முஹம்மது இலண்டனிலிருந்த காலங்களில் என்ன தொழில் புரிந்தார்? அவரால் நடத்தப்பட்ட இஸ்லாமிய அமைப்பில் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்தவர்களை அவர் இருக்கும் வரைக்கும் ஒரு உறுப்பினரை வழங்காதவர். அவர் நாடு திரும்பினாரா? நாடு கடத்தப்பட்டாரா? இவரைப் போன்றவரால் எமது சமூகத்திற்கு எதைச் செய்ய முடியுமென எதிர்பார்க்கிறீர்கள்?

6-நீங்கள் பிறந்து வளர்ந்த மண் காத்தான்குடியில் 3000 வாக்குகளுக்கு மேல் உங்களால் பெற முடியவில்லை.இந்நிலையில், எமது கிண்ணியாவின் அரசியலில் என்ன தவறைக்கண்டீர்கள்? எமது ஊரில் பிறந்து அக்கறையுடன் செயற்படும் ஆயிரம் இளைஞர்கள் இருக்கும் போது, உங்களுக்கு எதற்காக இந்த அக்கறை? ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். எமது ஊரின் அரசியல் மற்றும் சமூகத்தை வழிநடாத்த அல்லது சீரமைக்க உங்களிடமுள்ள திட்டங்களையும் நோக்கங்களையும் வெளிப்படுத்தலாமே??

சில தனிப்பட்ட காரணங்களால் பல கேள்விகளை, உங்கள் கடந்த கால இலண்டன் விஜயம் உட்பட சிலவற்றைத் தவிர்த்துள்ளேன். உங்களுக்கு அது தெரிந்திருக்கும்.

6-வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் பதவிக்காலம் இரண்டரை வருடங்கள் மாத்திரம் என ஏதேனும் உடன்படிக்கைகள் அவரோடு மேற்கொள்ளப்பட்டதா? ஆம், எனில் அதனை வெளிப்படுத்த முடியுமா?

பதவி மீளழைப்பு தொடர்பில் அஸ்மின் ஏதேனும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளாரா? ஆம் எனில், அதனை வெளிப்படுத்த முடியுமா?  மீளழைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்ட சபையில் அஸ்மின் பிரசன்னமாகியிருந்தாரா? அவர் எத்தகைய கருத்துக்களை அச்சமயத்தில் முன்வைத்தார்?

மீளழைத்தல் தொடர்பில் அஸ்மின் அவர்கள் ஏதேனும் நிபந்தனைகளை முன்வைத்தாரா? அவை எவை? அத்தகைய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதா?

7-கடந்த மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றம், வடகிழக்கு இணைப்பு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் செய்த ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக வெளியிட முடியுமா?

கடந்த மாகாண சபைத்தேர்தலில் TNA  மற்றும் வெளிநாட்டுச் சதியில் சிக்குண்ட நீங்கள் செய்த துரோகத்தால் சொற்பளவிலான வாக்குகளால் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாவது முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழந்தோம். அத்துடன், சொற்ப வாக்குகளால் சுயேட்சை சிங்கள உறுப்பினர் வெற்றி பெற்றது ஞாபகமுள்ளதா? முழுக்கிழக்கு மாகாணத்தில் TNA யுடன் சேர்ந்து செய்த துரோகத்திற்கு கிடைத்த பரிசு தான் வடமாகாண உறுப்பினர் அஸ்மி. அவர்கூட இன்று உங்களுடன் இல்லை.

8- கடந்த பொதுத்தேல்தலில் மு.காவின் தலைமையின் சதிக்குட்பட்ட நீங்கள், ஒரு பிரதேச சபை உறுப்பினல் கூட இல்லாத எமது மாவட்ட பொதுத்தேர்தலில் போட்டியிட்டீர்கள். மூதூர் மக்களைப்பிளவுபடுத்தி, பிரதேசவாதத்தை உண்டாக்கி, இறுதியில் தௌபீக்கிற்கு துரோகம் செய்து இஎமது பிரதேசத்துக்கான பிரதிநிதியைத் தோற்கடித்தீர்கள். இதற்காக தேசியப்பட்டியல் கேட்டு சண்டையிட்டீர்கள். இறைவன் அருளால் தௌபீக் மீண்டும் உறுப்பினரானர்.

உங்கள் பதவிக்கும், விஷப்பரீட்சைக்கும், வெள்ளோட்டத்திற்கும்  எங்கள் மாவட்ட முஸ்லீம்கள் வாக்குகளை பிரித்தாள்வதும். முரண்பாடுகளை உருவாக்குவதும் நியாயமா?

இருந்தும், மு.கா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மக்கள் இது போன்ற தெளிவைப் பெறாத காரணத்தினாலே இன்று கைசேதப்பட்டதாக உணர வேண்டிள்ளது.

உங்களைக்காயப்படுத்தும் நோக்கில் இல்லாமல், உங்கள் முலம் தெளிவு பெறவே இந்தப்பதிவை இடுகிறேன். நிச்சயம் உங்கள் பதிலுக்காகக் காத்திருப்போன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here