ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய வசூல்கள்-ஓட்டமாவடி அறபாத்

0
91

15253536_1387185087992580_1297459065070138858_nஇன்றைய தினகரன் பத்திரிகையில் ஒரு செய்தி “கடந்த ஜனாதிபதித்தேர்தலின் போது சட்ட விரோதமாக “சில் துணி” வினியோகித்த குற்றச்சாட்டில் தற்போது சிறையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தைச் செலுத்துவதற்காக பிக்குகள் அமைப்பின் குழுவொன்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த புகைப்படமொன்றுடன் கூடிய செய்தியினை வாசித்தேன்.

இதனை முன்னிறுத்தி சில அவதானிப்புக்களைப் பதிவிடுகின்றேன்.

அண்மைக்காலமாக எமது முஸ்லிம் பிரதேசங்களில் சிங்கள அமைப்புக்கள் கொத்துக்கொத்தாக வந்திறங்கி பைல்களுடன் வீட்டுக்கு வீடு, கடைக்கு கடையென ஏறி இறங்கி வசூல் வேட்டை நடாத்துவதனை அவதானிக்க முடிகின்றது.

ஏனைய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களும், ஆட்டோவில் ஒலி பெருக்கி கட்டி கிட்னி, ஹார்ட் பெயிலியர் என வசூலில் ஊரை வடிகட்டி இறங்கியுள்ளனர். வாகனங்களில் ஓரளவு பொடியன்மாரும் வந்து நோயின் பெயரால் பைல்களுடன் பெனர் சகிதம் அலை பாய்கின்றனர்.

குறிப்பாக, கிராமத்தின் வரை படத்தை நன்கறிந்தவர்கள் போல், உள் வீதிகளில் குழுகுழுவாக அலைவதனையும் நேர காலம் பார்க்காமல் வீட்டுக்கதவுகளைத் தட்டித்தரிவதையும் காண நேரிடுகின்றது. இதில் சிலர் உதவித்தேவைப்படும் நோயாளிகளும் இருக்கலாம். அவர்கள் உதவி செய்யப்பட வேண்டியவர்கள். பெரும்பாலும் இதுவொரு ஏய்த்துப்பிழைக்கும் தொழிலாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

சிறு பிள்ளைகளைச் சுட்டெரிக்கும் வெயிலி்ல் தூக்கிக்கொண்டு அலையும் பெண்கள் கூட்டமும் பெருகிக்கொண்டு செல்கின்றது. வாட்டசாட்டமான உழைக்கக்கூடிய குமருப்பிள்ளைகளும் வக்கிணையில்லாமல் பிச்சைக்கு ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளனர். தர்மம் கொடுக்க வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஊருக்குள் கால நேரமற்று மேய்ந்து திரியும் இந்தக்குழுக்கள் ஒங்குபடுத்தப்பட வேண்டும்.

கல்குடா ஜம்இய்இய்யதுல் உலமா, மூன்று ஊர்களினதும் பெரிய பள்ளிவாயல்கள், வர்த்தக சங்கம் போன்ற அமைப்புக்கள் இது விடயத்தில் அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.

வருகின்ற குழுக்களை நன்கு ஆராய்ந்து. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி, கிராமத்திற்குள் குறித்த எல்லைக்குள் குறித்த நேரத்திற்கு மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் அனுமதிப்பதனூடாக தவறான குழுக்களின் பிரசன்னத்தைத் தவிர்க்கலாம்.

குறிப்பாக, பிரதான வீதியில் வர்த்தகம் செய்பவர்கள் ஏக குரலில் பள்ளிவாயல் அல்லது உலமா சபையின் சான்றுப்படுத்தல் இல்லாமல் தர முடியாதென மறுக்கும் பட்சத்தில் ஏமாற்றும் கும்பலை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

மிக அவரசமாக இந்த நிறுவனங்கள் இது விடயத்தில் அவதானஞ்செலுத்தி ஒரு ஒழுங்குக்குள் இந்த வசூல் விடயத்தைக் கையாள வேண்டும். இல்லையென்றால், தடியைக்கொடுத்து அடிவாங்கவும் தயாரா இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here