தடைகளைக்கடந்து தலை நிமிர்ந்து நிற்கும் காத்தான்குடி நவீன பொது மலசலகூடம்

0
364

(ஆதிப் அஹமட்)

நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் வைத்திய ஆலோசனைக்கமைவாக கொழும்பிலே தங்கியிருந்தாலும் அவரது மக்கள் சேவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

காத்தான்குடியிலே ஒரு பொது மலசலகூடம் இல்லாதது பொதுவான ஒரு நீண்ட காலக்குறைபாடாகக் காணப்பட்டதோடு மிக அத்தியவசியமான தேவையாகவும் இருந்து வந்தது.

காத்தான்குடிக்கு வருகை தரும்  தூரப்பயணம் மேற்கொள்ளும் பிரயாணிகள் தங்களது அத்தியவசியத்தேவைகளை நிறைவு செய்ய முடியாத வண்ணம் மிகவும் நீண்ட காலமாக சிரமங்களை அனுபவித்து வந்தனர்.

இதனை அவதானித்து கருத்திற்கொண்ட  நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களினுடைய அயராத முயற்சியின் காரணமாக நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் இருபத்திரெண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் மிக அழகிய நவீன முறையிலமைந்த பொது மலசலகூடமொன்று பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மலசலகூடத்தை முபீன் அவர்கள் அமைக்க முற்பட்ட போது பல்வேறு தரப்பினராலும் பல வகையிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

குறிப்பாக ஒரு அரசியல் வாதியினாலும், ஊரில் புதிதாக தன்னை தலைவராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவரும் தாங்கள் சார்பான நிறுவனங்களூடாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

எனினும் உறுதியோடு அயராத முயற்சியை மேற்கொண்ட முபீன் அவர்கள் சகல தடைகளையும் கடந்து இப்பொது மலசலகூடத்தை நவீன முறையில் மக்களுக்காக நிர்மாணித்து முடித்துள்ளார்.

இம்மலசல கூடத்துக்கான வடிவமைப்பினை மேற்கொள்வதற்காக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எஸ்.எம்.எம்.ஷபி உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை கொழும்புக்கு அழைத்துச்சென்ற முபீன் அவர்கள் அப்பிரதேசங்களிலே அமைக்கப்பட்டுள்ள மிக நவீன மலசல கூடங்களைக் காண்பித்து காத்தான்குடியில் அமைக்கப்படவுள்ள மலசல கூடமானது மலசல கூடமென்று தெரியாதளவிற்கு மிகவும் நவீன முறையிலே அது அமையப்பெற வேண்டுமென ஆலோசனையை அப்போது வழங்கியிருந்தார்.

இம்மலசலகூடம் அமைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்ட பொது மக்கள் பலரும் இந்த நீண்ட காலத்தேவையினைக் கவனத்திற்கொண்டு அதனை தீர்த்து வைத்த யு.எல்.எம்.என்.முபீன் அவர்களுக்காக துஆச் செய்து கொள்வதாக இந்த மலசலகூடத்தை அமைத்த கொந்தராத்துக்காரர்கள் தெரித்தனர்.IMG-20170918-WA0000 IMG-20170918-WA0001 IMG-20170918-WA0002 IMG-20170918-WA0005 IMG-20170918-WA0006

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here