நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட பரிசுப்பொதி

0
158

z_p02-Sri-Lankaஇலங்கையில் அகதிகளாக வந்துள்ள மியன்மார் மக்களுக்கு அந்நாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமயம். படகு மூலமும், விமானம் மூலமும் இலங்கைக்கு வந்த மியன்மார் மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தினால் (UNHCR) இலங்கையில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இலங்கை அரசுக்கு ஒரு சதம் கூட செலவில்லை. ஒரு சில முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களும், தனவந்தர்களும் இவர்களுடைய விடயங்களில் உதவி ஒத்தாசைகள் செய்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடோன்றிற்கோ அல்லது அவர்களது சொந்த நாட்டின் நிலைமை சுமூகமாகும் வரை இவர்கள் தற்காலிகமாக இலங்கையில்  தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முழுச்செலவையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR)  பொறுப்பேற்றுள்ளது.

இங்கு கூட அவர்களுக்கு நிம்மதியில்லாமல் இனவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தலைதூக்கியுள்ளது. இன்று அவர்கள் இலங்கையிலும் கூட மறைந்து ஒழிந்து மறைத்தும் இருக்கக்கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது. இவர்களை நாம் ஒன்றுகூடிக் கொலை செய்வோமென இனவாதி டான் பிரசாத் வீடியோப்பதிவொன்றையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டிருந்தான் என்பதை யாவரும் அறிந்த உண்மை. இதற்கெதிராக ஒரு சில முஸ்லிம் சட்டத்தரணிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இன்றுவரை அவன் விசாரணை செய்யப்படாமல் அவனின் இனவாத அடாவடித்தனமும் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. இதனை விசாரிக்காமலிருப்பதன் பின்னணி என்ன?

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரால் (14.09.2017) மியன்மார் அரசைக்கண்டித்து, மாளிகாவத்தையிலிருந்து மியன்மார் தூதுவராலயம் வரை ஏற்பாடு செய்யப்பட ஆர்பாட்டத்திற்கெதிராக நீதிமன்றத்தடையுத்தரவு பெறப்பட்டு, அவர்களின் ஆர்ப்பாட்டம் மருதானையுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த வாரத்திலிருந்து (சண்டே லீடர் பத்திரிக்கை – Sunday leader 17/09/2017) மியன்மார் நாட்டினருக்கான இலங்கை விசா நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மியன்மார் நாட்டவர்களை திருப்பியனுப்பும்படி பிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்கிணங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவினால் கட்டுநாயக்க விமான நிலைய உயரதிகாரிகளுக்கு சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலமாக அகதிகளாகவோ எந்த காரணத்திற்காகவோ மியன்மார் மக்கள் இலங்கைக்கு வர முடியாத நிலையேற்பட்டுள்ளது. இராஜதந்திர கடவுச் சீட்டுக்களைத் தவிர.

இன்று வரை பிரதமரோ, ஜனாதிபதியோ மியன்மார் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் படுகொலைகளுக்கெதிராக ஒரு கண்டனமோ, அனுதாபமோ  தெரிவிக்கவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் குண்டுவெடிப்புகள், இயற்கை அனர்த்தம், வடகொரிய அணுவாயுத சோதனைக்கும், பாரிஸ் குண்டுவெடிப்பு, சிறு சிறு சில்லறை விடயங்களுக்கும் கண்டனமும் அனுதாபமும் தெரிவிக்கும் அரசாங்கம். பல ஆயிரம் மக்களைக்கொலை செய்து, பெண்களை கற்பழித்து உடமைகளை அழித்து நாட்டை விட்டு அப்பாவி மக்களை விரட்டியடிக்கும் இனச்சுத்திகரிப்புக்கெதிராக ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்காமலிருக்கின்றனர்.

முஸ்லிம்களின் வாக்குகளால், உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இது எங்களுக்குத்தருகின்ற இன்னொரு பரிசா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here