ஹக்கீம் கூறிய குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு எங்கே?

0
298

IMG_4215துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை.
செப்டம்பர் பதினாறாம் திகதி மு.காவின் ஸ்தாபகத்தலைவர் அஷ்ரப் மரணித்த தினமாகும். இத்தினமானது நினைவுபடுத்தப்பட வேண்டுமா? என்பதில் இஸ்லாத்தின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய வாதங்கள் சென்று கொண்டிருந்தாலும், மு.கா ஓரிரு தடவைகள் அதனைச்செய்து காட்டியிருப்பதன் மூலம், அது மு.காவின் பார்வையில் பிழையல்ல என்ற செய்தியைக்கூறுகிறது.

இம்முறை அமைச்சர் ஹக்கீம் பொத்துவிலில் முன்னாள் தவிசாளர் வாஸித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அஷ்ரபை நினைவுபடுத்தி வேலையை மிக சுலபமாக முடித்துக்கொண்டார். அஷ்ரபைக் கௌரவப்படுத்துவதாக இருந்தால் மு.காவின் தலைவராகவுள்ள அமைச்சர் ஹக்கீம் தலைமையில் ஒரு நிகழ்வாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அது தான் பொருத்தமானது. இதற்கெல்லாம் எங்கே அவருக்கு நேரமுள்ளது?

இருந்த போதிலும், கடந்த முறை அஷ்ரபை நினைவு கூற பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் ” அழகிய தொணியில் அல் – குர்ஆன்” எனும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த முறையுடன் இம்முறையையும் அதற்கு முந்திய நினைவு நாட்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, மலைக்கும் மடுவிற்குமிடையிலுள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ளலாம். கடந்த முறை பிரமாண்டமான முறையில் அந்நிகழ்வை நடத்தியது சில அழுத்தங்களால் என்றாலும் தவறில்லை.

கடந்த முறை குறித்த பிரமாண்டன நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் ” இதனைத்தொடர்ந்து அடுத்த முறை, அஷ்ரப் ஆராய்ச்சி கழகத்தினூடாக அல் குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அதற்கு தானே சாட்சியும் என்றார். அவர் அன்று கூறியதை இன்று செய்யவில்லை. எதனைத்தான் செய்துள்ளார் எனக்கேட்டால் என்னிடமும் பதிலில்லை.

அஷ்ரபைக் கௌரவப்படுத்த தான் செய்யப்போவதாகவும் நானே சாட்சியாகவுமிருப்பேன் எனக்கூறிய விடயத்தைக் கூட அவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர் கூறியது எனக்கு நினைவிலுள்ளது. இவர் அஷ்ரபின் நினைவுகளை எங்கே நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறார்? இது ஒரு வகையில் அஷ்ரபின் நாமத்தில் தேவைகள் நிமிர்த்தம் கூறப்படும் ஏமாற்று வார்த்தைகளாகவும். இவ்வாறான செயற்பாடுகள் அஷ்ரபை அகௌரவப்படுத்துகிறது. கௌரவப்படுத்தாவிட்டாலும் பறவாயில்லை, அகௌரவப்படுத்தாமல் இருக்கலாமல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here