இனவாதிகளின் பேரணியைத்தடுக்க முயற்சிக்காமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது-இபாஸ் நபுஹான்

0
306

IMG_2963முழு உலகத்திலேயே இலங்கை மாத்திரம் தான் மியன்மாருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதென பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ள அதே வேளை, SLTJ இன் ஆர்ப்பாட்டத்தைத்தடுக்க முனைந்த அரசு இனவாதிகளின் பேரணியைத்தடுக்க முயற்சிக்காமை ஏன்? என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்கும் வகையில் மியர்மார் அரசின் செயற்பாடு அமையப் பெற்றுள்ளது. பெருமதிப்பிற்குரிய பௌத்த மதத்தலைவர்களில் ஒருவரான தலாய் லாமா கூட இந்த விடயத்தைப் பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்கள். இவ்வாறான நிலையில், இலங்கையில் இவ்வாறான ஆதரவுப்பேரணிகள் நடாத்தப்படுவதானது, இலங்கை மக்களின் மனநிலையை சர்வதேச ரீதியில் கேள்விக்குட்படுத்துகிறது.

மியன்மார் அரசுக்கெதிராக SLTJ கண்டனப்பேரணியை நடாத்த முயற்சித்த போது, நீதிமன்றம் அவர்களின் திட்டத்தைக்குழப்பும் வகையிலான சில தடையுத்தரவுகளை வழங்கியிருந்தது. மியன்மார் அரசுக்காதரவாக இனவாதிகள் பேரணி நடாத்திய போது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு அவர்களுக்கு இவ்வரசானது ஆதரவு நல்கியிருந்தது. இவ்வரசானது இனவாதிகளை அரவணைக்கும் பண்புடையதென்பதற்கு இன்னுமென்ன சான்று வேண்டும்.

மியன்மார் அரசு முன்னெடுத்துக் கொண்டிருப்பது பயங்கரவாதச்செயற்பாடு. பயங்கரவாதச் செயற்பாடுகளை ஆதரிப்பவார்கள் பயங்கரவாதிகள் தான். அது மாத்திரமன்றி, மியன்மார் அரசின் செயற்பாடு பிழையானதல்லதென அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதால் இனவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மியன்மார் விடயத்தில் இவ்வரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். வட கொரியா விடயத்தில் கண்டன அறிக்கை விடும் இவ்வரசானது, மியன்மார் விடயத்தில் மௌனம் பேணுவதேன். தற்போது இடம்பெறும் பேரணி விடயங்களை எடுத்து நோக்கினாலேயே, இவ்வரசின் ஆட்சிக்காலத்தில் மியன்மாரைப் போன்று இலங்கையில் ஏற்பட்டால் அதனை இவ்வரசு ஆதரிக்குமென்பதில் ஐயமில்லை. நல்லாட்சி தொடர்பில் முஸ்லிம்கள் நன்கு சிந்தித்துச்செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here