ஓட்டமாவடி மஜ்மா நகரில் புகையிரத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து

0
273

S1700015எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (17.09.2017) பயணித்த இரவு நேர கடுகதி புகையிரதத்தில் வாழைச்சேனை மஜ்மா நகர் 193 மைல் கல் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கும் புணாணை புகையிரத நிலையத்திற்குமிடைப்பட்ட மஜ்மா நகர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையால் வாழைச்சேனையிலிருந்து மஜ்மா நகர் கிராமத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி புகையிரதத்தில் இரவு 9.15 மணியளவில் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் சென்ற சாரதியுடன் நால்வர் எதுவித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், முச்சக்கர வண்டி நீண்ட தூரம் தூக்கியெறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.S1700001 S1700003 S1700007 S1700015 S1700022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here