நாம் ஞானசார தேரரை வம்புக்கிழுக்கின்றோமா?

0
264

indexதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை.

இலங்கை முஸ்லிம்களுக்கு மிக அதிகமான தொல்லைகளை வழங்கியவர், வழங்கிக் கொண்டிருப்பவர்களில் ஞானசார தேரர் முதன்மையானவர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. இருந்த போதிலும், அண்மைக்காலமாக வேறு சிலர் இனவாதச்செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருக்கின்ற போதும் ஞானசார தேரர் மிக அமைதியாக இருப்பது யாவரும் அறிந்த விடயம். அவர் அப்படியே இருந்து விட்டால் எமக்கும் சந்தோசம் தான்.

அவர் அண்மையில் ஜப்பான் சென்ற விடயமானது, பல தரப்பாலும் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டது. நீதியமைச்சிலிருந்து விஜயதாச நீக்கப்பட்டதால் பயந்து ஓடி விட்டதாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. யாராவது ஒருவர் தன்மானத்தை கேள்விக்குட்படுத்துகின்ற போது, மிகக்கடுமையான கோபம் எழும். எதனை இழந்தாலும் நாம் பயப்படப் போவதில்லையென்ற கொடிய சிந்தனை எழும். இந்தச்சிந்தனைகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

அது மாத்திரமல்ல, உண்மையில் முன்னாள் நீதியமைச்சரின் கீழ் ஞானசார தேரர் இருந்திருந்தால், விஜயதாஸ ராஜபக்ஸ தன்னை குற்றமற்றவர் எனக்காட்ட, ஞானசார தேரருக்கு கட்டளை இட்டு, மீண்டும் முன்னர் போன்ற செயற்பாடுகளை அரங்கேற்ற நிர்ப்பந்திக்கப்படுவார். நான் இல்லாத போதும், அவர் தனது வேலைகளைச் செய்கின்றார் தானே என நியாயம் கற்பித்துக்கொள்வார். இதுவெல்லாம் நாம் நிமிர்ந்து கொண்டு துப்பும் செயல்களாக அமைந்து விடும்.

அண்மைக்காலமாக மிகவும் அமைதியைப் பேணியவர், மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டதால் தான் என்னவோ, அவர் மீண்டும் எதற்கும் அஞ்சாமல் றோகிங்கியா அகதிகள் தொடர்பில் கருத்துக்கள் வெளியிட வருவார் என அவர்கள் அமைப்பு கூறியுள்ளது. எமது விமர்சனங்கள் உனக்கு தைரியமிருந்தால் வா என்ற வகையில் தானே அமைந்துள்ளது.

அவர் பயப்படுவது மகிழ்ச்சியான விடயம். ஆனால், நாம் அதனைக் கொண்டாடுவதில் எந்தப்பயனும் கிட்டப்போவதில்லை. எமது அனைத்துச் செயற்பாடுகளும் அவரை வம்புக்கிழுப்பதாக அமையாது. அவரைத்தண்டிக்க வேண்டுமென்ற கோணத்தில் அமைந்து, அவரை அச்சுறுத்துவதாக அமைதல் வேண்டும். எமது சிறிய செயற்பாடுகள் பாரிய விளைவுகளைக் கொண்டு வந்துவிடவல்லதென்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here