வாழைச்சேனையில் இரண்டாயிரம் கிலோ சுறாமீன்கள்!

0
201

(கல்குடா செய்தியாளர்)

20170919_135810_resized_3வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழகடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபடகு ஒன்றுக்கு இரண்டாயிரம் கிலோ மதிக்கத்தக்க சுறா மீன்கள் பிடிபட்டுள்ளதுடன் அத்துடன் வேறு இன மீன்கள் ஆயிரம் கிலோவிற்கு அதிகமான அளவு பிடிபட்டுள்ளதாகவும் படகு உரிமையாளரான அலியார் யாக்கூப் என்பவர் தெரிவித்தார்.

கடந்த 15.09.2017 அன்று வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து மீன்பிக்கச்சென்ற படகிற்கே இவ்வாறு மீன்கள் பிடிபட்டுள்ளதாகவும் படகு உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த மீன்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஏல விற்பனை மண்டபத்தில் ஏலம் விடுபட்ட போது இன்றைய விலை நிலையில் சுறாமீன்களின் பெறுமதி பத்து லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(F)20170919_141051_resized 20170919_141128_resized_1 20170919_141310_resized_1 20170919_141353_resized_1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here