முஸ்லிம்களுக்குச்சொந்தமான விவசாயக்காணிகள் அரச காணிகளாக அடையாளப்படுத்தப்படுகிறது-சாட்டோ வை.எல்.மன்சூர் (வீடியோ)

0
199

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கல்குடா-கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை எல்லைகளுக்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் பட்டியடிவெளி விவசாயக்கண்டத்திலுள்ள முஸ்லிம் விவசாயிகளான நொத்தாரிசாகக் கடமையாற்றுகின்ற ஏ.எல்.எம்.பாரூக், பீர்முஹம்மட், மம்மூசி, மொஹம்மட் பழீல் ஆகியோர்களுக்குச் சொந்தமான 27 ஏக்கர் காணிகளை அபகரித்து அரச காணிகளாக அடையாளப்படுத்தி தமிழ் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி இனமுறுகலை அப்பிரதேசத்தின் கிராம சேவையாளர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், கிரான் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மரைக்கார் திடல் அல்லது சேரடிமுனை அல்லது சோலி முனை என்றழைக்கப்படும் நான்கு பக்கங்களும் ஆறுகளாலும்இ, ஓடைகளாலும் சூழப்பட்ட நூறு வீதம் முஸ்லிம்களுக்குச்சொந்தமான சுமார் முன்னூறு ஏக்கர் விவசாயக்காணிகளை அரச காணிகளாக அப்பிரதேசத்தின் கிராம சேவையாளர் தலைமையில் அடையாளப்படுத்தி அபகரிப்பதற்கான முயற்சிகளில் தமிழ் மக்களை நகர்த்தியுள்ளனர்.

மேற்படி குறித்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வரலாற்றுப்பூர்வமான காணிகள் 1913ம் ஆண்டு தொடக்கம் அரசாங்களால் வழங்கப்பட்ட உறுதி ஆவணங்கள், இதர ஆதாரங்கள் என்பன உள்ன. ஆகவே, குறித்த பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய மேற்படி பிரச்சனைகளை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், ஏனைய நிருவாக உத்தியோகத்தர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஏனைய தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள், புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள், தமிழ் மக்கள் பேரவை போன்றவைகள் உடனடி கவனமெடுத்து நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களும், சமூக ஆர்வலருமான சாட்டோ வை.எல்.மன்சூரும் வேண்டி நிற்கின்றார்.

மேலும், பிரச்சனைகளுக்குள்ளாகியுள்ள காணிகள் சம்பந்தமான உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு குறித்த பிரதேசத்திற்குச் சென்று விரிவான விளக்கத்தினை தரும் சாட்டோ மன்சூரின் விளக்கத்துடனான விரிவான காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ-முஸ்லிம்களினுடைய காணிகள் அரச காணிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றதா?:-
www.youtube.com/watch?v=e92_ALlt5rA
கவர் போட்டோ 20170918_133421 - Copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here