டான் பிரசாதை அடக்க முடியாத அரசு, இனவாதத்தையா அடக்கப்போகிறது?

0
226

IMG_3022இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச்சிந்தனைகளை விதைக்கவும் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் ஒரு குழு எப்போதும் முயன்று கொண்டே இருக்கின்றது. அந்த குழுக்களை அடக்க ஆடித்திரியும் சிலரது வால்கள் ஒட்ட நறுக்கப்படல் வேண்டும். அதிலொருவர் தான் இந்த டான் பிரசாத் என்பவராகும். மிக நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கெதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

அந்த வகையில், ரோகிங்கிய மக்கள் தொடர்பில் முகநூலில் பதிவிட்டுள்ள அவர் “தாங்கள் ஒன்றிணைந்து அவர்களைக் கொன்று விடுவோம்” எனக்கூறியுள்ளார்.

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது இவ்வாட்சியாளர்களின் கடமையாகும். இலங்கை அரசானது சர்வதேச ரீதியிலான பல கொள்கைகளைக் கவனத்திற்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படியிருக்கையில், “அவர்களைக்கொல்வோம் “ என எச்சரிப்பது தீவிரவாதத்துடன் தொடர்புடைய வார்த்தைப்பிரயோகங்களாகும். இலங்கை அரசு எப்படியான முடிவை எடுத்தாலும், அது வேறு விடயம். இப்படியான வார்த்தைப்பிரயோகங்களைப் பாவிக்க எத்தனை துணிவு வேண்டும்?

இவர் நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். விஜயதாஸ ராஜபக்ஸவை அமைச்சிலிருந்து நீக்கியதால், ஞானசார தேரர் பயந்து ஜப்பான் சென்று விட்டதாகக்கூறினார்கள். சாதாரண டான் பிரசாத்தை அடக்க முடியாத அரசு, ஞானசார தேரரையா அடக்கப்போகிறது? இதற்கிடையில், இவர் இனவாதத்தைத்தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடக்கூடாதென நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டவர். அண்மையில் முஸ்லிம் பெண் சிங்களப்பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்குகிறார் என்ற போலிக்குற்றச்சாட்டுக்களைக்கூட முன் வைத்திருந்தார்.

இவ்வரசு டான் பிரசாத் விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டும். நீதியை நிலை நாட்ட வந்த நீதியமைச்சராவது நீதியை நிலை நாட்டுவாரா?  எத்தனை முறை எப்படிக்கேட்டாலும், இவ்வரசு டான் பிரசாத் போன்றவர்களின் விடயத்தில் நீதியை நிலை நாட்டப்போவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here