கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு முதலுதவிப்பெட்டி வழங்கல்

0
170

IMG-20170920-WA0054ஊடகப்பிரிவு

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது இப்பிரதேசத்தில் பல தரப்பட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் கல்விப்பிரிவு பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விடயங்களில் கவனஞ்செலுத்தி வருவதோடு, வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் பல வகையிலும் நிதியுதவிகளையும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் முதலுதவிப்பெட்டி (First Aid Kit) இன்று 2017.09.20ஆந்திகதி புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி, கல்விப்பிரிவின் தலைவர் ஏ.எம். பிர்னாஸ் ஆசிரியர் மற்றும் கல்குடாத்தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ் ஆகியோர் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜீ. பிர்தௌஸ் அவர்களிடம் அதிபர் காரியாலயத்தில் வைத்து இதனை வழங்கி வைத்தனர்.IMG-20170920-WA0054

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here