தேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல்

Spread the love

WhatsApp Image 2017-09-20 at 9.33.55 PM(அகமட் எஸ். முகைடீன்)
43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களான எம்.வை.எம். றகீப், ஏ.ஜி.எம். மசூத், எம்.ஐ.எம்.எப். ஹிஜாஸ், எம்.யு.ஏ. சம்லி ஆகியோருக்கு ஓடுவதற்கான காலணிகளை விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் நௌபர் ஏ. பாவாவினால் இன்று (20) புதன்கிழமை விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மேற்குறித்த வீரர்கள் 43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், தங்களுக்கு ஓடுவதற்குரிய காலணியின்மை தொடர்பில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கான காலணிகளை வழங்குமாறு விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் தனது இணைப்புச்செயலாளரை பணித்தமைக்கமைவாக மேற்படி காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் 4×400 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் குறித்த வீரர்கள் குழுவாகப் பங்குபற்றவுள்ளதோடு, 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் எம்.வை.எம். றகீப்பும் 4×100 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் ஏ.ஜி.எம். மசூத்தும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் 4×400 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் குறித்த வீரர்கள் குழு முதலாமிடத்தையும் 4×400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் எம்.வை.எம். றகீப் இரண்டாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.HMM HareesWhatsApp Image 2017-09-20 at 9.58.30 PM

WhatsApp Image 2017-09-20 at 9.33.55 PM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*