எமது அபிவிருத்திகளை விற்று ஆட்சி நடாத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நல்லாட்சிக்கு-நாமல் ராஜபக்ஸ

0
263
IMG_3058எமது ஆட்சிக்காலத்தில் விமர்சனத்துக்குள்ளான எமது சேவைகளில் பலவற்றை இன்று குத்தகைக்கு கொடுத்து ஆட்சி நடாத்த வேண்டிய நிலைக்கு இவ்வரசாங்கம் சென்றுள்ளதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டதாவது,
எமது ஆட்சிக்காலத்தில் மத்தளை விமான நிலையம், ஹம்பாந்தோட்ட துறைமுகம், நெடுஞ்சாலைகள் அமைத்தல்  போன்றன பிழையான அபிவிருத்திகளாக மக்களிடையே கூறப்பட்டிருந்தன. இன்று சங்கிரிலா ஹோட்டல் போன்ற ஹோட்டல்களை அமைக்க வெளிநாடுகளுக்கு இலங்கை நிலத்தைக் கொடுக்க வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரத்தன கூறியுள்ளார். இதனை நாம் எமது ஆட்சியில் கூறியிருந்தால், இன்று ஆட்சியிஉள்ளவர்கள் எவ்வாறு நடந்து கொண்டிருப்பார்கள் என்பதைச்சற்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.
நாம் எதை முன்னெடுத்தாலும் அதனை பிழையெனக்கூறவே ஒரு கூட்டம் அலைந்தது. நாள் தோறும் இதனைக்கூறிக் கூறியே மக்களை நம்ப வைத்தனர். எமது ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரமில்லை என்றார்கள். இவ்வாறான விடயங்களில் போலித்தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்தது ஊடகங்கள் தான். அதன் மூலமே நாங்கள் வீழ்ச்சியையும் சந்தித்தோம்.
இன்று இலங்கையில் என்ன நடக்கின்றதெனப் பார்த்தால், ஹம்பாந்தோட்டை சீனாவுக்கும், மத்தளை ஜப்பானுக்கும் என குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்தளை விமான நிலையத்தில் ஜப்பான் குரக்கனும், சீனா, சோளகமுமா செய்கை பண்ணப்படப்போகிறது. நாம் செய்த அபிவிருத்திகள் பிழையானதல்ல என்பதை இந்நாடுகள் முண்டியடித்து வந்து குத்தகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளச் செய்கிறது. நாம் எதிர்காலத்தைச் சிந்தித்து எமது திட்டங்களை அமைத்திருந்தோம். இன்று எமது சிந்தனைகளின் பெறுமதிகளை மக்கள் அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
இந்த நாட்டின் அமைவிடம் மிகவும் பெறுமதியானது. அதன் காரணமாக பெறுமானத்தை விட பல மடங்கு அதிகமான குத்தகைக்கு எடுக்கவும் குறித்த நாடுகள் தயங்காது. இருந்த போதிலும், அந்த நாடுகளுக்கு இவ்வரசானது குறித்த துறைமுகங்களை மிகக்குறைவான குத்தகைக்கு வழங்கியுள்ளது. நாம் செய்த சேவைகளை இவ்வரசுக்கு குத்தகைக்கு கொடுத்துக்கூட பிழைக்கத்தெரியாதா? அல்லது வேறேதேனும் ஒப்பந்தங்கள் உள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here