நீதிமன்றத்தை மீறி ஜப்பான் சென்ற ஞானசார தேரருக்கு என்ன நீதி?-இபாஸ் நபுஹான்

0
262

IMG_3061ஐப்பான் சென்ற ஞானசார தேரர் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவுக்கு இம்முறை அன்புளிப்பாக வாங்கி வந்து கொடுத்த பொருளை அறிய விரும்புவதாக பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ்வரசானது முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவை அமைச்சிலிருந்து நீக்கிய சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் ஜப்பான் சென்றிருந்தார். இவ்விரண்டையும் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்ய முனைந்த இவ்வரசின் விசுவாசிகள், அவர் தங்களுக்கு ஆதரவளித்து வந்த விஜயதாஸ ராஜபக்ஸ அமைச்சிலிருந்து நீக்கப்பட்டதற்கு அஞ்சியே ஜப்பான் சென்றார் என்ற பரப்புரையை மேற்கொண்டார்கள்.

தற்போது பார்த்தால், அவர் ஜப்பான் சென்று ஊடகவியலாளர் மாநாடு நடாத்துகிறார். இப்போது அவரைக்காப்பாற்றப் போவது யார்? விஜயதாஸ ராஜபக்ஸ நீதியமைச்சிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரே! அவர் ஜப்பானிலிருந்து இவ்வாட்சியாளர்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்கள் தான் அவரை காப்பாற்றப்போகிறதோ தெரியவில்லை.

நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்ட, நீதி மன்றத்துக்கு விசாரணைகளுக்குச்செல்ல வேண்டிய, நீதி மன்றத்துக்குச்செல்லாமல் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் எப்படி ஜப்பான் சென்று வந்தார். அவர் மந்திரத்தைப் பயன்படுத்தி மறைந்து சென்றாரா?

தற்போது விமான நிலையங்கள் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளும் விரல் அடையாளத்தை கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. ஞானசார தேரர் ஏற்கனவே ஜப்பான் போன்ற நாடுகளுக்குச்சென்று வந்துள்ளார். இவர் முக்காட்டை மூடிக்கொண்டு ஜப்பான் சென்றாலும், இவர் தான் ஞானசார தேரர் என்பதைக்கண்டு பிடித்துக்கொள்ளலாம்.

இவர் நீதி மன்றம் செல்லாமையினால், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்து. பகிரங்கமாக ஊடகவியலாளர் மாநாடு நடாத்தும் இவர், ஏன் கைது செய்யப்படவில்லை. இன்னும் இவ்வாட்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் விஜயதாஸ ராஜபக்ஸ போன்றோர் காப்பாற்றுகிறார்கள் எனக்கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here