அகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம்

0
250

ஆர்.எஸ்.மஹி

அகில இலங்கை சமாதான நீதிவானாக பிரபல தொழிலதிபர் தேசகீர்த்தி, தேசபந்து, லங்காபுத்ர நடராஜா சத்தியசீலன் கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதி நீதிவான் டி.எம்.டி.சீ. பண்டார முன்னிலையில் நேற்று 20.09.2017ம் திகதி புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொழும்பு -15, முகத்துவாரம், அலுத் மாவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இரத்மலானை இந்துக்கல்லூரியின் பழைய மாணவராவார். அத்துடன், லயன்ஸ் கழகத்தின் கொழும்புக்கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், மட்டக்குளி ‘பீச் பார்க்’ அமைப்பின் அபிவிருத்திக்குழு உறுப்பினரும், முகத்துவாரத்தைச்சேர்ந்த நடராஜா மற்றும் அன்னலட்சுமி தம்பதிகளின் மகனுமாவார். IMG_20170921_0001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here