கடலுக்குள் குப்பை கொட்டுகின்ற நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்-வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்

0
282

01 (3)எஸ்.எம்.எம்.முர்ஷித்
உலக நாடுகளில் அதிகளவுக்கு குப்பைகளை கடலுக்குள் கொட்டுகின்ற வரிசையில் இலங்கை முன்னனியில் காணப்படுகின்றதென வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தெரிவித்தார்.

தேசிய கடல் வளங்கள் பேணும் வாரத்தின் கரையோரம் சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாட்டில் கல்மடு கடற்கரை சுத்தம் செய்யும் பணி இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போது, உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டைப்பொறுத்த வரையில் கடற்கரையை அண்டிய பிரதேசம் மிக முக்கியமானது. இதில் பொது மக்கள் செறிவாக வாழும் பிரதேசமாகக் காணப்படுகின்றது. அதே போன்று, மீன்பிடி கைத்தொழில் நடைபெறுகின்ற பிரதேசமாகவுள்ளதுடன், நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருகின்ற சுற்றுலாத்துறை கரையோரப்பகுதியில் காணப்படுகின்றது. எல்லா வகைகளிலும் கடற்கரையும் கடற்கரைசார் வளங்களும் மிக முக்கியமாகக் காணப்படுகின்றது.

வளங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு. இதனைப்பாதுகாக்காவிட்டால், கடற்கரை வளங்கள் அருகிச்செல்லக்கூடிய வாய்ப்புள்ளது. உலக நாடுகளில் அதிகளவுக்கு குப்பைகளை கடலுக்குள் கொட்டுகின்ற வரிசையில் இலங்கை முன்னணியில் காணப்படுகின்றது.

கடலுக்குள் குப்பைகளை நாங்களே கொட்டுகின்றறோம். குப்பைகளை நாங்கள் கொட்டாமல் விட்டால் கடற்கரையைச் சுத்திகரிக்க வேண்டிய தேவையில்லை. கடற்கரையைப்பாதுகாக்கின்ற விழிப்புணர்வு இனி வரும் சமூகத்திற்கு முக்கியமானது. அந்த வகையில், அனைத்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டுமென்ற வகையில் மாணவர்கள் செயற்பட வேண்டும் என்றார்.

கரையோரம் சுத்திகரிப்பு நிகழ்வில் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறியிலாளர் எம்.துளசிதாசன், பாசிக்குடா சுற்றுலாத்துறை திணைக்கள முகாமையாளர் எம்.மாஹீர், பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரி எஸ்.ஏ.பைரூஸ், செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பாசிக்குடா சுற்றுலா விடுதிகளின் சங்க உறுப்பினர்கள், பாசிக்குடா தஹாம் ஹோட்டல் ஊழியர்கள், பொலிஸ் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள், கல்குடா வலைவாடி மீனவர் சங்கம், கல்மடு மீனவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூளவளங்கள் முகாமைத்துவத்திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, வாழைச்சேனை பிரதேச செயலகம், வாழைச்சேனை பிரதேச சபை, அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் அனுசரணையில் கரையோரம் சுத்திகரிக்கப்பட்டது.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12) 01 (13) 01 (14) 01 (15) 01 (16) 01 (17) 01 (18) 01 (19)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here