எமக்கு அஞ்சியே தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது-நாமல் ராஜபக்ஸ

0
154

IMG_3085தோல்விப்பயத்தில் அரசியலமைப்பில் மாற்றம் செய்து விளையாடும் இவ்வரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லவென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

தேர்தலைப்பிற்போடு நோக்கில் மாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலத்தைக் கொண்டு வந்தமை தொடர்பில் அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,

இவ்வரசானது மூன்று மாகாண சபைகளினதும் காலங்கள் நிறைவடையவுள்ளதால், அக்காலத்துக்கு முன்பு ஏதாவது செய்து அதனை நடத்தாமல் தடுப்பதற்கு இல்லாத பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. நாங்கள் எமக்கு அஞ்சியே இதனையெல்லாம் செய்கிறார்கள் எனக்கூறும் போதெல்லாம், சிலர் நம்ப மறுத்தனர். இவ்வரசின் தற்போதைய செயற்பாடுகளினூடாக அது தெள்ளத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

பொலன்னறுவை தற்போதைய ஜனாதிபதியின் ஊராகும். இருந்த போதிலும், அண்மையில் நடைபெற்ற பொலன்னறுவைக் கூட்டுறவுச்சங்கத் தேர்தலில் இவ்வரசினர் படுதோல்வியைச் சந்தித்தனர். ஒரு ஆட்சியிலுள்ள ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே அவருக்கு மதிப்பில்லையென்றால், ஏனைய இடங்கள் பற்றி சொல்லத்தேவையில்லை. பொதுவாக கூட்டுறவுச்சங்கத் தேர்தலை பெரிதாகத் தூக்கிப் பிடிப்பதில்லை. மாகாண சபைத்தேர்தல்களில் அங்கு தோல்வியைத் தழுவினால், இவ்வாட்சியானது தகர்ந்து விடும். அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினருக்குச் சாதகமாக அமைந்து விடும். இது தான் மாகாண சபைத்தேர்தலை எது செய்தாவது தடை செய்ய முனைவதற்கான பிரதான காரணமாகும்.

20வது சீர்திருத்தத்தைக்கொண்டு வந்து கலைக்கப்படவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலைத் தடுக்கப்பார்த்தார்கள். அதற்கு நீதிமன்றம் ஆப்பு வைத்த மறுகனம் தேர்தல் மாற்றமெனக்கூறி அடுத்த திட்டத்தைக்கொண்டு வந்தனர். இவ்விரண்டுக்குமுள்ள ஒரேயொரு ஒற்றுமை மாகாண சபைத்தேர்தலை தள்ளிப்போடுவதாகும்.

இவர்கள் தானே! முழு அரசியலமைப்பையும் மாற்றப்போகிறார்கள். அதன் ஒரு பாகமாக இதனையும் மாற்றலாமே! எத்தனையோ விடயங்கள் பற்றிக் கதைக்கும் இவ்வரசு, இதனை மாத்திரம் தூக்கிப் பிடித்துள்ளதேன்? இவைகளைச் சிந்தித்தால் தெளிவான பதிலைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here