நாடு மோசமான நிலையில் பயணிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

0
226

IMG_3105நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியைத் தக்க வைக்க தேர்தல்களைப் பிற்போட்டு வருகின்றனர். பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளைக்கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிற்போடவே முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டுக்கு பொருத்தமில்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டு வந்து நாட்டின் இறைமையை அழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலைப் பிற்போட்டு தமது ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், நல்லாட்சி அரசாங்கம் ஒரு போதும் தேர்தலைப்பிற்போடத் தயாராக இல்லையாம். எனினும், பெண்களின் அரசியல் பலத்தைப் பெருக்கவே தேர்தல்கள் தாமதமாகின்றதென்றும் அரசாங்கம் கூறுகின்றது. நாம் உருவாக்கிய இந்நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் இன்று அழிக்கப்பட்டு மோசமான திசையில் நாடு பயணித்து வருகின்றது.  மேலும், இந்நாட்டுக்கு ஏற்கப்படாத பல சட்டங்கள், கொள்கைகள் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது, இந்நாட்டை ஆதரிக்கும், நேசிக்கும் எம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதெனக்குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here