செரோ, IBMS ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கு இலவசக்கல்விக்கருத்தரங்கு

0
265

(ஆதிப் அஹமட்)
இந்த வருடம் (2017) கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், செரோ ஸ்ரீலங்கா மாணவர் ஒன்றியமும் IBMS கல்லூரியும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய வகையில் பிரபலமான ஆசிரியர்களைக் கொண்டு கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு மற்றும் வர்த்தகமும் கணக்கீடும் ஆகிய  பாடங்களுக்கான கல்விக்கருத்தரங்குகளை முற்றிலும் இலவசமான முறையில் ஒக்டோபர் முதலாம் வாரத்திலிருந்து  நடாத்தத் திட்டமிட்டுள்ளது.

குறித்த கல்விக்கருத்தரங்குகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை (23.092014, 24.09.2014) ஆகிய தினங்களில் காத்தான்குடி IBMS கல்லூரியில் தங்களது பெயர்களை பின்வரும் நேர ஒழுங்குகளுக்கேற்ப பதிந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

காலை 8.00 மணி  தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை- மாணவிகள்
மாலை 3.00 மணி தொடக்கம் மாலை  6.00 மணி வரை – மாணவர்கள்21686835_300029693808140_3521555599701694708_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here