ஓட்டமாவடியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை: உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை- பிரதேச சபைச்செயலாளர் ஜே. சர்வேஸ்வரன்

0
281

Untitled-1(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதாக பொது மக்களால் எமக்கு முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற வண்ணமாகவேயுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் பொது அறிவித்தல்களும் மாடுகளின் உரிமையாளர்களுக்கான அறிவித்தல்களும் விடுக்கப்பட்டிருந்தும் எந்தவிதமான முன்னேற்றங்களும் காணப்படாமையால் கட்டாக்காலி மாடுகளை பொலிஸாரின் உதவியுடன் பிரதேச சபையினால் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும், அண்மைக்காலமாக இவ்வாறு கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் எந்தவிதமான அறிவித்தல்களையும் பொருட்படுத்தாமல் கவனயீனமாக நடந்து கொள்வதன் காரணமாக, இவ்விடயம் குறித்து கட்டவிழ்த்து விடப்பட்ட மாடுகளால் பொது மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.

எனவே, இவ்வறிவித்தலானது கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கான இறுதி அறிவித்தலாகும் என்பதனைக் கவனத்திற்கொண்டு மேற்படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மாடுகளை பிரதேச சபைச்சட்டம் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கப்பிரிவு 65 மற்றும் 66 க்கமைய நீதிமன்றத்தின் மூலமாக கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென்பதாக பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here