அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தயார் காலமானார்

0
227

1H6A7491பிறவ்ஸ் & வாழைச்சேனைஎச்.எம்.எம்.இம்றான் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரான உதுமா லெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வௌ்ளிக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நாளை (23.09.2017) சனிக்கிழமை காலை 10 மணிக்கு 20/1, அல்பேட் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு என்ற முகவரியிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களில் வாசஸ்தலத்திலிருந்து கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.

இவர் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் மர்ஹூம் என்.எம்.ஏ. ரவூப் அவர்களின் மனைவியும், டாக்டர் ஹபீஸ், ரவூப் ஹஸீர், ரவூப் ஹக்கீம், ஹஸான், ஹஸார் ஆகியோரின் அன்புத்தாயாருமாவார். தனது கணவர் கடமையாற்றிய தெஹிதெனிமடிகே, கலாவெவ, ஹோராப்பொல, தம்பாளை ஆகிய கிராமங்களிலும் வசித்து வந்திருக்கிறார்.

ஹபுகஸ்தலாவைப் பிறப்பிடமாகக்கொண்ட மார்க்கப்பற்றுள்ள இவர், தற்போது அருகிவரும் அரபுத்தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அரபுத்தமிழை வளர்க்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு தனது மகன் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இவர் வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனம் கிடைப்பதற்கு அனைவரும் பிரார்த்திப்போம்.1H6A7491

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here